Thursday, March 10, 2011

அண்ணன் பிஜேக்கு ஓரு பாமரனின் கேள்விகள்!



பிஜேக்கு ஒரு பாமரனின் பதில்கள்.

அன்புள்ள இஸ்லாமிய மார்க்க சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்!)

நான் இக்குழுமத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், பல குழுமங்களில்
ஃபார்வார்டு செய்யப்படுவதால் என் மெயில் ஐடிக்கும் ஃபார்வர்டு
செய்யப்பட்டு  எனக்கும் தொடர்ந்து மெயில்கள் வர ஆரம்பித்துள்ளது. நானும்
நல்ல விஷயங்கள் உள்ளதால் செலக்டிவாக மெயில்களைப் படிப்பது உண்டு.

ஆனால், தற்பொழுது சில காலமாக வரும் மெயில்களின் பொருள் படித்து மிகுந்த
மனவேதனைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகி உள்ளேன். ஆம், இது அபுசுமையா -
பீஜே இடையிலான கருத்து பரிமாற்றம் - (வீண்) விவாதம்.

                சிறு வயது முதல் தௌஹீது சிந்தனையில் வளர்ந்த நான் இன்று
தௌஹீது என்று தம்மை பறைசாற்றுவோரைக் கண்டால் 10 அடி தள்ளி நிற்கிறேன்.
காரணம், அவர்களின் சொல் - செயல் - நடத்தையால்.

                பீஜே மதுரை அவனியாபுரத்தில் அல்ஜன்னத் ஆஃபீஸ் என
பிரிண்டிங் பிரஸ் வைத்துக் கொண்டிருந்த காலம்முதல் அவரை நான் அறிவேன்.
பீஜேயின் மார்க்க ஆசிரியர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரியின் பல உரைகளை
நேரில் கேட்டிருந்த நான் பீஜேயின் “கேள்வி கேளுங்கள் - சந்தேகத்தைப்
போக்கி கொள்ளுங்கள்” என்ற பாணி என்னை மிகவும் கவர்ந்தது.  அது பரிணாம
வளர்ச்சி பெற்று “” இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்” என்ற பல்சமய சகோதரர்கள்
நிகழ்ச்சியில் “”உங்களுக்கு இஸ்லாம் பற்றிய எந்த கேள்வியானாலும் -
சந்தேகமானாலும் தயங்காமல் கேளுங்கள்.  நாங்கள் தவறுதலாக நினைக்க
மாட்டோம்.  எவ்வளவு கடுமையாக உணர்ச்சிகளைக் கொட்டி திட்டி கேட்க
வேண்டுமா? கேளுங்கள்! நாங்கள் கோபப்பட மாட்டோம்.  சிரித்துக் கொண்டே
பதில் சொல்வோம்” என அறிவிப்பு செய்து இஸ்லாம் அல்லாதவரையே கேள்வி கேட்க
சொன்ன பீஜே இன்று ?

அபுசுமையா கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வாறே புன்னகைத்துக் கொண்டே பதில்
சொல்ல வேண்டியது தானே?  அதை விடுத்து அபுசுமையாவை (இந்த சகோதரர் யாராக
வேண்டுமானால் இருக்கட்டும்) மூன்றாம் தர எழுத்துக்களால் திட்டி தீர்ப்பது
தான் முறையா? இது தான் நபி வழியா?

கேள்வி கேட்பவரின் பின்னணி, அவர் யார் என்ற முழு விபரம் தெரிந்தால்தான்;
பதில் சொல்வீர்களா? அப்படியென்றால் ஜவாஹிருல்லா – ஹைதர் அலி - பாக்கரோடு
கை கோர்த்து இருந்த கால கட்டத்தில் விண் டி.வி.யில் Live டெலிபோன் காலில்
வரும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொன்னீர்கள்?  அந்த காலில் வரும்
நபரின் பெயர், ஊர், எண், உண்மையானது தான் என எப்படி
உறுதிப்படுத்தினீர்கள்? டெலிபோன் பில்லை அவர்கள் உங்களுக்கு அனுப்பி,
அதைப் பார்த்து சரி கண்ட பின் பதில் கூறினீர்களா?

பீஜே அவர்களே ப்ளீஸ் வேண்டாம்.  அல்லாஹ் நம் அனைவரையும் கண்காணித்துக்
கொண்டு உள்ளான் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்.

அபுசுமையாவின் கேள்விகளுக்கு ஒன்று பதில் கூறுங்கள் அல்லது பதில் கூற
என்னால் முடியவில்லை என அபுசுமையாவை உதறி தள்ளிவிடுங்கள்.  அதை விடுத்து
அவருடைய ஈமானை, பிறப்பை, ஒழுக்கத்தை குறித்து விமர்சிக்க வேண்டாம்.

பலர் நல்ல முறையில் உங்களுக்கு சுட்டிக் காட்டியும் இறைவனுக்கு அஞ்சாமல்,
மறுமைத் தண்டனைகளுக்கு பயப்படாமல் மென்மேலும் அநியாயம் இழைக்கிறீர்கள்.
உங்களுடைய இணைய தளத்தில் அபுசுமையா மீது நீங்கள் கூறிய உங்களுடைய அவதூறு
இழிச்சொற்களுக்கு நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.  அல்லது
அல்லாஹ்விடம் முறையிடுவேன் என்று எழுதிய பின்பும் மன்னிப்பு அல்ல குறைந்த
பட்சம் நீங்கள் எழுதியதை வாபஸ் வாங்க கூட நீங்கள் தயாரில்லை? பி.ஜே.
அவர்களே என்னவாயிற்று உங்களுக்கு? ஷைத்தான் உங்கள் கண்களை - சிந்தனையை
மழுங்கடித்து விட்டானா? இஸ்லாத்தையும், சக சகோதரனின் கண்ணியத்தையும் பலர்
முன்னிலையில் காலில் போட்டு மிதித்து விட்ட உங்களின் ஈகோ,  மறுமையில்
முன் வந்து பரிந்துரைக்குமா?

தக்வா என்ற தலைப்பில் நீங்கள் 1995–96ல் பேசிய இரண்டு ஆடியோ கேசட்டுகள்
உள்ளன.  நீங்கள் ஒருமுறை அவற்றை கேட்டுப் பாருங்கள்.  உங்கள் தவறுகள்
உங்களுக்கு விளங்கும்.

இந்த (வீண்) விவாதத்தின் உச்சகட்டமாக இந்தக் கள்ளப் பேர்வழி மீது உள்ள
வழக்கு என்ன? ஏன் தலை மறைவாக வேண்டும்? குற்றப் புலனாய்வுத்துறையின்
தேடுதல் பட்டியலில் கள்ளப் பேர்வழியின்பெயர்இருப்பது ஏன்? கள்ளப்
பேர்வழியின் ஒரிஜினல் பெயர் என்ன? இப்பொது ஒளீந்து கொண்டிருப்பது எந்தப்
பெயரில்? அனைத்தையும் போட்டுக் கொடுக்கட்டுமா என்றெல்லாம் பீஜே கேட்டுக்
கொண்டிருக்க மாட்டார். எப்போது எங்கே எப்படி தெரிவிக்க வேண்டும் என்று
அவர் விரும்பும் போது உரிய நேரத்தில் உரிய வகையில் செய்ய வேண்டியதை பீஜே
செய்வார். இப்படி எழுதியுள்ளீர்கள்.

இதைப் படித்தவுடன் என் மனம் பட்ட வேதனைக்கு அளவில்லை.  அபுசுமையாவின்
பெயர் குற்றப் புலனாய்வுத்துறையினரின் தேடுதல் பட்டியலில் இருப்பது
(அல்லாஹ் ஆலம்) (இது உண்மையா என்பது விவாதத்துக்குரியது. ஒரு பேச்சுக்கு
உண்மையென்றால் கூட) பீஜேக்கு எப்படி தெரியும்? இவர் எப்பொழுது
குற்றப்புலனாய்வுத்துறையில் வேலைக்கு சேர்ந்தார்?  அல்லது அவர்களுடைய
இரகசிய உளவாளியா (Police Informer )? அல்லாஹ்வே அறிவான்.

மேலும் அனைத்தையும் போட்டுக் கொடுக்கட்டுமா? எப்போது, எங்கே, எப்படி
தெரிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் உரிய வகையில் செய்வேன் (என
கேட்க மாட்டோம் என்று சொல்லி மிரட்டி) என பீஜே கூறியுள்ளது, அவரே தன்
வாயால் ” பீஜே போலீஸில் போட்டு கொடுப்பவர் - ஆள்காட்டி” என்று பலரும்,
பலவகையில், பல்வேறு நேரங்களில் அவரைப்பற்றி கூறியதை ஒத்துக்
கொண்டுள்ளதாகத் தான் அறிய முடிகிறது. ஆம், பீஜேயின் சுய வாக்குமூலம் இது.
பல்வேறு சமயங்களில், பல்வேறு நபர்களால் பீஜே மீது கூறப்பட்ட இந்த“”ஆள்
காட்டி” குற்றச்சாட்டு பட்டியல் இமாம் அலி, சீனி நைனா முஹம்மது, ஹாமித்
பக்ரி, ஜாகீர் ஹஸைன், மொய்தின் பக்ரி, முகைதின் உலவி என்று நீளுகிறது.

குண்டு வைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள RSS - சங்பரிவார் கும்பலை
என்றைக்காவது பீஜே போலீஸில் காட்டி கொடுத்துள்ளாரா? குஜராத், மும்பை
சம்பவங்களில் அம்ரேஸ் மிஸ்ரா போன்றோர் கண்டுபிடித்தவற்றை பயன்படுத்தி
பீஜே RSS மீது எடுத்த நடவடிக்கை என்ன? சரி அவற்றை விடுங்கள்.
குறைந்தபட்சம், தமிழகத்தில் தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு
RSS தான் குண்டு வைத்தது என நிரூபணமானதால் வழக்கை கிடப்பில் போட்ட தமிழக
அரசு மீது பீஜே என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

பாவம் பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் கேள்வி கேட்ட
ஒருவனர போட்டுக் கொடுக்க உங்களால் முடியும் என்றால் "சமுதாயத் துரோகி"
என்ற சொல் நினைவுக்கு வருகிறது. உங்களை நம்பியிருக்கும் மக்களை நினைத்து
மனம் பதறுகிறது.

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம் என சூளுரைக்கும் ததஜ தொண்டர்கள்
குறிப்பாக அபுநூறா, அதிரை ஃபாரூக், ஹாமீன் இப்ராஹீம், மஸுது, போன்றோர்
பீஜே கூறியுள்ளது தவறு என ஏன் பகிரங்கமாக இக்குழுமத்தில் எழுதத்
துணியவில்லை?

ஏன் எனில் இதுதான் தக்லீத் என்பது.  யார் என அடையாளம் தெரியாமலேயே எந்த
ஒரு ஆதாரமும் இன்றி அபுசுமையாவை அவன், இவன், என ஒருமையிலும், ஈமான்,
பிறப்பு, ஒழுக்கம் குறித்து பீஜே ஒரு முஸ்லிம் என்றும் பாராமல்;;;;;;;;
கேவலமாக திட்டி எழுதுவதும் தவறில்லையா ததஜ சகோதரர்களே? அல்லாஹ்விற்காக
ஒரே ஒரு நிமிடம் இயக்க சூழலை விட்டு நீங்கி யோசித்துப் பாருங்கள்.
பாதிக்கப் பட்ட சகோதரின் மன அமைதிக்கும், அநியாயம் செய்தவருக்காகவும்
தொழுகையில் துஆ கேட்பவர்கள் பட்டியலில் இணைவீர்கள்.

முஸ்லிம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது.  தலைவர்கள் எப்படி
வழிகெடுத்து கொண்டுள்ளனர்? சமுதாயத்தின் நேரம், பொருள், சக்தி, எப்படி
வீண் விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது?

RSS - சங்பரிவார் கும்பல் திட்டம் தீட்டி சதி செய்து அவர்கள் வைத்த
குண்டுகளை முஸ்லிம்கள் வைத்ததாக பழி சுமத்தி முஸ்லிம் சமுதாயத்தை குற்றப்
பரம்பரையாக சித்தரித்து கொண்டு உள்ளனர்.  இதை எதிர்த்து இச்சதியை
முறியடிக்க வேண்டிய முஸ்லிம் இயக்கங்கள் (ததஜ போன்ற), அதன் தலைவர்கள்
(பீஜே போன்றோர்) இச்சமுதாயப் பணியில் ஈடுபடாமல் சொந்த சகோதரர்களுக்கு
எதிராக பத்திரிக்கை இணையதளத்தில்; எழுதியும், டிவி, பொதுக்கூட்டத்தில்
பேசியும் இஸ்லாமிய அழைப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டிய மீடியா சாதனங்களை
வீணடித்து வருகின்றனர்.

நம்முடைய எதிரி யார் என்று தெரியாமல் (நிச்சயம் தலைவர்கள் அறிவர்.
மக்களை தான் முட்டாளாக்குகின்றனர்.)  நமக்குள்ளே சண்டையிட்டு கொள்வதோடு
மட்டுமல்லாமல், நம்முடைய கவனம் உண்மையான எதிரிகளின் மேல் செல்லாது
தடுத்து விடுகின்றனர்.

பீஜேயின் சொல்லும், செயலும் வெவ்வேறானவை எனப் பல்வேறு வகையில்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு சின்ன சாம்பிள், 
தொப்பி போடக்கூடாது என கடுமையாக எதிர்த்த பீஜேயினால்
தொழுகை நேரத்தில் சண்டை மூண்ட பள்ளிவாயில்கள் எத்தனை?  ஆனால், இன்று அதே
பீஜே தொப்பியில்லாமல் வெளியே வருவதில்லை.  இதை சுட்டிக்காட்டினால்,
தொழுகையில் தொப்பி அணிந்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை தவறானது என
நிரூபிக்க அவ்வாறு கூறினேன்.  நான் ஒன்றும் தொழுகையில் அணிவதில்லையே என
தன் வாதத்திறமையால் சமாளிக்கிறார்.  மக்கள் மறதியாளர்கள் என்பதை அவர்
உணர்ந்துள்ளதால் இவ்வாறு கூறுகிறார்.  ஆனால் ஞாபகசக்தி வலிமை உள்ள
மனிதர்களுக்கு ”தொப்பி அணிவது யூதர்களின் அடையாளம் - வழக்கம்” என இதே
பீஜே கூறியது மறந்திருக்காது.

மற்றொரு உதாரணம், பிரிந்து கிடக்கும் தௌஹீது இயக்கங்களை ஒன்றிணைக்க
வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில சகோதரர்கள் முயற்சி எடுத்து 2003ல்
நெல்லை ஏர்வாடியில் “”தௌஹீது ஒற்றுமை மாநாடு” ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
அனைவரையும் அழைத்தனர். பீஜேயை தவிர மற்ற அனைவரும் அபு அப்துல்லாஹ், JAQH
கமாலுதீன் மதனீ, டாக்டர் முஹம்மது அலி, ஹாமித் பக்ரி, உட்பட பலர் கலந்து
கொண்டனர்.  பீஜே யையும் எப்படியாவது கலந்து கொள்ள வைக்க வேண்டும் - அதன்
மூலம் ஒற்றுமை ஏற்படட்டும் என்று சில சகோதரர்கள் பீஜேயை அணுகிய போது
“”கொள்கை வெவ்வேறான இருவர் எப்படி ஒரே மேடையில்  அமர்ந்து பேசுவது?
“”இயக்கம் கூடாது” என்று கூறும் அபு அப்துல்லாவும், “”இயக்கம் கூடும்”
என்று சொல்லும் நானும் எவ்வாறு ஒரே மேடையில் அமர்ந்து பேசுவது?” எனக்
கேட்டு ஒற்றுமை ஏற்படவிருந்த அருமையான வாய்ப்பை அன்றிலிருந்தே காலில்
போட்டு மிதித்தவர் தான் இந்த பீஜே.

“”இயக்கம் கூடுமா? கூடாதா?” என்பது ஒன்றும் தௌஹீது அல்லது இஸ்லாமிய
கொள்கைக்கு முரண்பாடானது அல்ல.  ஆனால், ஏகத்துவத்துக்கு எதிரான பலதெய்வ
சிலை வணங்கிகளான மூப்பனார், வரதராஜன், தா. பாண்டியன், ராமதாஸ், போன்ற
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களோடு வாழ்வுரிமை மாநாடு என்ற
பெயரில் அமர்ந்து பேசியது மட்டும் வெவ்வேறான முரண்பாடான கொள்கை இல்லையா?
நடுநிலையாளர்கள் - அதாவது அல்லாஹ்விற்கு பயந்தவர்கள் இந்த இரண்டு சிறிய
உதாரணங்களைக் கொண்டு பீஜே எப்படிப்பட்ட முரண்பாடுகள் உடைய சந்தர்ப்பவாதி
என உணர்வார்கள்.

பீஜேயிடம் தௌஹீது பிரச்சாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த ஹக் -
உண்மை, நேர்மை, வாய்மை இன்று இல்லை.  அதனால், தான் இன்று அவரால் எங்கு
சென்றாலும் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  அவரை பலரும் நான் உட்பட
வளைகுடா நாடுகளுக்கு தௌஹீது பிரச்சாரம் செய்ய அழைத்த போது “”நான்
எந்தவொரு வெளிநாடுக்கும் செல்லக் கூடாது” என்ற கொள்கையை (எந்த குர்ஆன்,
ஹதீஸ் ஆதாரத்தில் இதை கூறினார் என்று அபுசுமையா கேட்பது காதில்
விழுகிறது) வைத்துள்ளேன் என கூறிய பீஜே அந்நஜ்ஜாத், அல்முபீன், அல்
ஜன்னத், ஒற்றுமை என பத்திரிக்கைகளிருந்தும் ஜாக், தமுமுக, தவ்ஹீத் ஜமாத்
என இயக்கங்களிருந்தும் வெளியேறி தனக்கென உணர்வு, ஏகத்துவம் என்ற
பத்திரிக்கைகளையும், ததஜ என்ற இயக்கத்ததையும் ஆரம்பித்த பிஜே இவற்றிற்கு
ஆதரவு திரட்ட வேண்டி தன் வெளிநாட்டு கொள்கையை மாற்றிக் கொண்டு 2004ல்
துபாய்க்கு வர அங்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.  ததஜ சகோதரர்களே...
தயவு செய்து சிந்தியுங்கள்!

இறுதியாக, சில பழைய சம்பவங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.

மதுரையிலிருந்து பீஜேயை சென்னைக்கு கிளப்பி செல்ல அழைத்து பாக்கர்
வரும்பொழுது சில சமயம் அவர் வரும் தகவல் கிடைத்து, பீஜே மாடியில் இருந்து
கொண்டு வெளியில் சென்று விட்டதாகக் கூறச் சொல்ல பேராசிரியர் நதீம்
ரசூலுல்லாஹ் பொய் சொல்ல அனுமதித்த 3 காரணங்களில் இது வரவில்லையே என
வாதிட்டது நினைவுக்கு வருகிறது.

மேலும், பீஜே என நினைத்து அப்பாவி யூஸுப் மிஸ்பாகியை எந்த
குற்றச்சாட்டுக்காக சிலர் அடித்தனர் என்ற சம்பவத்தையும் பீஜேக்கு இங்கு
நினைவூட்டுகிறேன்.

80களில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் திருக்குர்ஆன் மாநாடு நடத்த
ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்த பொழுது கலீல் அஹ்மது கீரனூரியின்
தலையீட்டால் அது தடைசெய்யப்பட்டு ஒரு கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கால கட்டத்தில் மதுரையில் பீஜேயின் உரைகளைக் கேட்டு விட்டு கலீல்
அஹ்மது கீரனூரியிடம் நேரில் சென்று விளக்கம் கேட்பேன்.  தராவீஹ் இரவுத்
தொழுகை 8ஆ 20ஆ எனக் கேட்டபொழுது கீரனூரி நபி (ஸல்) 8ரக்அத் தான்
தொழுதார்கள்.  ஆனால், உமர் (ரலி) 20ரக்அத் தொழுதுள்ளார்கள் அதற்கு சரியான
ஆதாரம் உள்ளது என்றார்.  நான் உடனே தயவு செய்து 20க்கு ஆதாரம் உள்ளதாக
கூறும் நீங்கள் அதை பீஜேக்கு கூறி நிரூபித்தால் எம்மை போன்றோர்
குழப்பத்திலிருந்து மீள வழிபிறக்குமே எனக் கோரிக்கை வைத்தேன்.  அதற்கு
கீரனூரி “”கிங்காங்கை ஒரு 5 வயது பொடியன் குஸ்திக்கு அழைத்து அறைகூவல்
விடுத்தால், எப்படி போவான்?” என்றார்.  அதாவது, தன்னை கிங்காங்  எனவும்
பீஜே போன்ற தௌஹீதுவாதிகள் பொடியன் எனவும் கூறினார்.

இதை பீஜேயிடம் கூறியபொழுது கீரனூரியின் அகங்காரம் - ஆணவம் உங்களுக்கு
புரியவில்லையா என்றார்.  அப்போது உடனிருந்தவர் மறைந்த பேராசிரியர்
ஜமாலுதீன்.  அவர் மாநாடு தடைசெய்து பின் மண்டபத்தில் நடந்ததை வைத்து அல்
ஜன்னத்தில் “கிங்காங்கும் ஒராயிரம் பொடியன்களும்” என்ற கட்டுரையை எழுதி
கீரனூரியின் ஆணவம் - கிப்ர்ஐ கடுமையாக விமர்சித்து எழுதினார்.

தன் ஆசிரியர் கலீல் அஹ்மது கீரனூரியையே மிஞ்சி இன்று பீஜே ஆணவத்தின் உச்ச
கட்டத்தில் உள்ளார். நான் எந்த ஒரு இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை.
எந்த ஒரு இயக்கம் சார்பிலும் இதை எழுதவில்லை. நம் கொள்கை சகோதரர்
யாரேனும் வழி தவறி நடக்கும் போது அவருடைய தவறை சுட்டிகாட்டி திருத்த
முயற்சி செய்வது நம் கடமையல்லவா? அதன் அடிப்படையில் தான் இந்த கடிதத்தை
எழுதி உள்ளேன்.  சகோ. பீஜே என் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்வார் என
நம்புகிறேன். தவறை சுட்டிக் காட்டிய ஒரே காரணத்திற்காக என் மீதும்
அவதூறுகளை இட்டுக் கட்டி மேன்மேலும் பாவமூட்டையை முதுகில் சுமக்க
வேண்டாம்.

சகோதரர் பீ.ஜே அவரை ஆட்டுவிக்கும் இந்த இயக்க வெறி - சுயநலக் கும்பல்களை
விட்டு ஒதுங்கி ஒரு வாரம் தனிமையில் தன் குடும்பத்துடன் மட்டும் தங்கி
வேறு எந்த நபரையும் சந்திக்காது தன்னை தானே சுய பரிசோதனை செய்து தன் சொல்
- செயல் - நடத்தை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் உள்ளதா என ஆராய்ந்து
பார்த்தாரானால் நிச்சயம் அது அவருடைய மறுமை வாழ்வின் வெற்றிக்கு உதவும்.
இதை அவர் செய்ய அவருக்கு நேரம் சூழல்களை அமைத்துத் தர எல்லாம் வல்ல ஏக
இறைவனிடம் துஆ செய்கிறேன்!
 

நன்றி
ஜாஹிர் ஹுஸைன். (
zahirdg...@yahoo.co.in)

No comments:

Post a Comment