''ஏன்டா கிறுக்குப் பயலே; ஜனவரிக்கும் பாபர் மஸ்ஜிதுக்கும் என்ன சம்மந்தம்..? சொன்னது நானில்லை. சாட்சாத் PJ தான்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் ததஜ, இந்த ஆண்டு நடத்தவில்லை. நாங்கள் ஜனவரியில் நடத்துகிறோம் என்று காரணம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
ஆனால், மற்ற அமைப்புகள் போராட்டம் நடத்திவிட்ட நிலையில் நாம் நடத்தாதது மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உண்டுபண்ணி விட்டதே என்று உணர்ந்த அண்ணன், போராட்ட 'கிரவுண்டு' மாறிவிட்டது; மைதானம் மாறிவிட்டது என்றெல்லாம் வியாக்கியானம் அளித்தார். அதோடு நிற்காமல் இப்போது போராட்டம் பற்றி உணர்விலும் சில வியாக்கியானங்களை கொடுத்துள்ளார்.

உணர்வு, நாடும் நடப்பும் பகுதியில், ''எந்த தீர்ப்புக்காக காத்திருந்தோமோ அந்த தீர்ப்பு அரசியல் தனமாக மாறிப்போச்சு. இனியும் டிச.6 ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தா 'இவர்கள் வருடத்தில் ஒருநாள் கோஷம் போட்டுவிட்டு கலைந்துவிடும் கூட்டம்' என்று அரசும் நம்மை கண்டு கொள்ளாது விட்டுவிடும்'' என்கிறார்.
டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவது அன்றைய தினம் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் என்பதால்தான். அன்றைய போராட்டத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையோடு, பாபர் மஸ்ஜிதை இடித்த கயவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படும். தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாபர் மஸ்ஜித் இடம் தொடர்பாக மட்டுமே. இடித்த குற்றவாளிகள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், உலகமெங்கும் உற்று நோக்கும் இந்த நாளை விடுத்து சாவகாசமாக அடுத்த ஆண்டு சம்மந்தமில்லாத நாளில் ஆர்ப்பாட்டம் பேரணி என அலம்புவது ஏன்?
மேலும் டிச 6 அன்று போராட்டம் நடத்துவதில் உள்ள முக்கியத்துவம் பற்றி இதே பஜ் முன்பு கூறியதை பாருங்கள்;
''எந்த நாளில் மக்கள் உணர்ச்சியோடு இருப்பார்களோ அந்த நாளை இதுக்குப் பயன்படுத்துனாத்தான் சக்சஸ் ஆகும். இப்ப வந்து ஜனவரியில் வாங்க பாபர் மஸ்ஜிதுக்கு போராடுவோம்னு சொன்னா, 'ஏன்டா! கிறுக்குப் பயலே!! ஜனவரிக்கும் பாபர் மஸ்ஜிதுக்கும் சம்மந்தம் என்னன்னு கேட்ருவான். வரமாட்டான் மக்கள்.

என்றும் அண்ணன் வழியில்
தௌஹீத் தொண்டன்
No comments:
Post a Comment