1999 மார்ச் அல்முபீன் இதழின் 56 பக்கங்களும் அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்ற பெயரால் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோ, ஏற்கத்தக்க விளக்கங்களோ எதுவுமே இல்லை. வெறும் உளறல்களாக, அபத்தக் களஞ்சியங்களாக பக்கங்கள் நிரப்பப்பட்டிருந்தன. மக்களுக்கு மார்க்கத்தை விளக்க வேண்டும் என்ற நன்னோக்கத்துடன், இஃலாஸ்-தூய எண்ணத்துடன் அந்த ஆய்வு இடம் பெற்றதாக தெரியவில்லை. தன்மீது சுமத்தப்படும் ஒரு கடமையான குற்றச்சாட்டிலிருந்து, தனது ஆதரவாளர்களை திசை திருப்பி, தக்கவைத்துக் கொள்ளும் ஒது தவறான நோக்கத்துடன் செய்யப்பட்டதே அந்த ஆய்வு.
சுய சிந்தனையாளர்களிடம் அந்த ஆய்வு கால் காசு பெறாத நிலையில், அதற்காக அந்நஜாத்தின் பக்கங்களை வீணடிக்க வேண்டாம் என்ற எண்ணத்திலேயே அதைத் தட்டிக் கழித்து வந்தோம். ஆனால் அவரது ஆதரவாளர்கள் இதை ஒரு பெரிய ஆதாரமாகக் காட்டி, அந்த ஆய்வுக்கு எந்தக் கொம்பனாலும் பதில் அளிக்க முடியாது என்று வீராப்புப் பேசித் திரிகிறார்கள். தொலைபேசியில் எம்மிடமும் கூறி வருகிறார்கள்.
அதே சமயம் 1987லிலிருந்து இன்று 2008 வரை, கடந்த 22 வருடங்களாக பிரிவுப் பெயர்கள், ஆலிம்-அவாம் வேறுபாடு, அமானித மோசடி, பிறருக்குச் சொந்தமானதை அபகரித்து விட்டோம் என பொய்ச் சத்தியங்கள். அவதூறுகள், தத்தம் பகுதி பிறை, ஒரு பொருளுக்கு ஒருமுறை மட்டுமே ஜகாத். இதுபோல் பல விவகாரங்களில் எனது எண்ணற்ற கேள்விகளுக்கு, இன்றுவரை அவர் உரிய பதில் அளிக்க முடியாமல் வாய்மூடி மெளனம் சாதிப்பதை அவரது ஆதரவாளர்கள் கண்டு கொள்வதே இல்லை; ‘அபூ அப்தில்லாஹ் இந்த அளவு உங்களின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறாரே; நீங்கள் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்” என்று அவரிடம் போய்க் கேட்கும் துணிச்சல் அவரது ஆதரவாளர்களுக்கு இல்லை; தொலைபேசியில் எம்மைத் தொடர்புகொண்டு, “அமீர் ஆய்வு கட்டுரைக்கு நீங்கள் பதில் எழுத வேண்டியதுதானே” என்று சொல்பவர்களிடம், எமது கேள்விகள் பலவற்றிற்கு பல வருடங்களாக பதில் அளிக்காமல் உங்கள் அண்ணன் மெளனம் சாதிக்கிறாரே, அதைப்போய் அவரிடம் கேட்க வேண்டியதுதானே? என்று நாம் கேட்டால், உடனடியாக அவர்களின் பதில் என்ன தெரியுமா? அண்ணனிடம் போய் இப்படி எல்லாம் நாங்கள் கேட்க முடியுமா? என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் பதிலாக இருக்கிறது. எனவேதான் அவரது ஆதரவாளர்களை அவரது ரசிகர்கள், பக்தர்கள் என்று கூறுகிறோம்.
ஜூலை 2007 பக்கம் 2-ல் நாம் விட்ட பகிரங்க அறை கூவலுக்கு, இன்று வரை பதில் அளிக்கும் ஆற்றல் அவருக்கோ, அவரது பக்தகோடிகளுக்கோ, ரசிகர்களுக்கோ இல்லை என்பதையும் இங்கு நினைவுபடுத்துகிறோம்.
அன்றே இந்த அமீர் ஆய்வுக் கட்டுரைக்கு நாம் மறுப்பு எழுத முற்படாததற்கு இன்னொரு காரணம், சிறிது சுய சிந்தனையுடையவர்களும் அந்த ஆய்விலுள்ள அபத்தங்களை அவர்களே படித்து விளங்கும் அளவுக்கு அந்த ஆய்வின் தரம் தாழ்ந்து இருந்த அதே வேளை, அன்று அரசியல், இயக்க வெறியுடன் அவர் பின்னால் அணி வகுத்து நின்றவர்களுக்கு, என்னதான் தெளிவான நேரடியான விளக்கங்களைக் கொடுத்தாலும், அதை ஏற்று தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும் நிலையில் அவர்கள் அன்று இருக்கவில்லை. எனவே எமது முயற்சி உரிய பலனைத் தராது என்பது அடுத்த காரணம்.
நிலை மாறி வருகிறது!
ஆனால் அல்லாஹ்வுடைய பெருங்கிருபை கடந்த ஒன்பது(9) ஆண்டுகளாக அவருடன் ஒட்டி, உறவாடி, கலந்து உருண்டு பிறண்டவர்களில் ஒரு பெருந்தொகையினர் அவரது சுயநல சுயரூபத்தை தங்களின் சொந்த அனுபவங்களில் கண்டு வருகின்றனர். சுதாரித்து வருகின்றனர். மனம் திருந்தி வருகின்றனர். பாவமன்னிப்புக் கேட்டு மீள்கின்றனர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் 1999 மார்ச் அல்மூபீன் இதழில் வெளியான “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ள அபத்தங்களை, மார்க்க முரணான கருத்துக்களை, புரோகிதர்களின் வழமையான நடைமுறையிலுள்ள குர்ஆன், ஹதீஸ் திரித்தல், வளைத்தல், மறைத்தல் இவற்றை எல்லாம் தெளிவுபடுத்தி, சிந்திக்க முன் வரும் சகோதர, சகோதரிகளுக்கு நேர் வழியை புரிய வைக்கும் நன்நோக்கத்துடன் இந்த அலசல் மேற்கொள்ளப்படுகிறது.
காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு சுய சிந்தனையுடன் இந்த ஆய்வைப் படித்து, யாருடைய கருத்து குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறது; யார் மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்ல முயற்சி செய்துள்ளார் என்பதை அறிந்தணர அன்புடன் வேண்டுகிறோம்.
மேலும் இந்த அலசலை ஒருபொழுதுபோக்காக – நேரம் கடத்த, படுத்துக் கொண்டு தூக்கம் வரும்வரை (Light reading) மேலெழுந்தவாரியாகப் படிக்காமல், உரத்த சிந்தனையுடன் படிக்க அன்புடன் சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகிறோம். மேலும் இந்த அலசலை படிக்க ஆரம்பிக்கும்போதே பக்கத்தில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை கண்டிப்பாக வைத்துக் கொள்ளவும். குர்ஆன் அத்தியாய எண்ணும் வசன எண்ணும் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில், உடனடியாக தாமதியாது குறிப்பிட்ட அத்தியாயத்தை, வசனத்தை அல்குர்ஆனிலேயே புரட்டி எடுத்து நேரடியாகப் படிக்கவும். அப்போதுதான் இது அபூ அப்தில்லாஹ்வின் சுய கருத்து அல்ல; நம்மைப் படைத்து, பரிபாலித்து, கண்காணித்துக் கொண்டிருக்கும் நமது எஜமானன் அல்லாஹ்வின் கட்டளை என்ற இறை உணர்வு(தக்வா) ஏற்படும்.
இப்படி பயிற்சி பெறுவதால் ஆண், பெண் அனைவருக்கும் அல்குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்படும். இறை உணர்வு(தக்வா) ஏற்பட அதுவே சிறந்த வழி. அந்நஜாத்தில் உள்ளதை மட்டும் படித்துவிட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை அல்குர்ஆனில் பார்க்காமல் விடுவதால், இரண்டு தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு, ஒன்று அந்நஜாத, அபூ அப்தில்லாஹ் என்று தனி மனித வழிபாட்டிற்கு அது வழி வகுக்கும்; அல்லது இரண்டாவது அல்குர்ஆனின் வசனங்களையும் மனிதக் கருத்தாக எண்ணி புறக்கணிக்கும் நிலை (பார்க்க. 25:30) உருவாகும். இரண்டுமே பெரும் ஆபத்தை விளைவிப்பவையே! அல்குர்ஆனுடன் நேரடித் தொடர்பை அவசியம் ஏற்படுத்திக் கொள்வோமாக.
********************************
1999 மார்ச் அல்முபீனின்
அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வின்
நோக்கம்!
முதலில் இந்த ஆய்வுக்குரிய முக்கிய சுயநலத்துடன் கூடிய, தூய எண்ணமற்ற நோக்கத்தை அறிந்து கொண்டால்தான், இந்த ஆய்வின் லட்சணத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு 1980களிலிருந்து நடந்த சம்பவங்களை அறிவது அவசியம்.
1985-க்கு முன்னர் இந்த P.J. யார் என்றே எமக்குத் தெரியாது. 30-10-1984-ல் திருச்சி, சின்னப்பர் இறையியல் கல்லூரியின் பல்சமய உரையாடல் குழுவினர் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் “மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினோம். அந்த சமயத்தில் நாம் திருச்சி எலக்ட்ரிக், எலக்ட்ரோனிக், என்ஜினியரிங் மற்றும் பைப்ஸ் வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த காரணத்தால், அந்த உரை சங்கச் செலவிலேயே 5000 காப்பிகள் அச்சடிக்கப்பட்டு தமிழகமெங்கும் விநியோகிக்கப்பட்டது. அது இந்த மவ்லவிகளில் பலருக்குக் கிடைத்துள்ளது. அந்நூல் கிடைத்து அதைப் படித்துப் பார்த்த பின்னர், இப்போதைய ஜாக் அமீர் S.கமாலுத்தீன் மதனி நமக்கு ஓர் அழைப்பு விடுத்தார். அதில் அவரது ஊர் நாகர்கோவில் கோட்டாறில் மவ்லவிகள் அதிகமாக இருக்கிறார்கள். அங்கு வந்து உங்களது இந்த கருத்துக்களை எடுத்து வையுங்கள் என்று வேண்டினார்.
அவரது அழைப்பை ஏற்று நாகர்கோவில்-கோட்டாறு சென்று அங்கு கூடிய மவ்லவிகளுக்கு மத்தியில் எமது கருத்தை எடுத்து வைத்தோம். அப்போது எமது கருத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியாகும். அவரது கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களையே கொடுத்தோம். அதன் பின்னர் மத்ஹபுகளை கைவிட்டு குர்ஆன், ஹதீஸ் படி நடக்க அவர் முன்வந்தார்.
அதன் பின்னர் கடையநல்லூரிலும் மவ்லவிகள் அதிகம் இருக்கின்றனர். அங்கும் இதுபோல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று S.K. மீண்டும் 2.5.85-ல் எழுதிய கடிதம் வருமாறு.
பெருமதிப்பிற்குரிய சமுதாய சீர்திருத்தப் பெரியார் ஜனாப் ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நலம் நலமே நாட்டம். இம்மாதம் 15ம் தியதியிலிருந்து 19ம் தியதிக்குள் ஒருநாள் கடையநல்லூரில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்ய நாடியுள்ளோம். தாங்கள் தான் அவ்வரங்கை ஏற்று நடத்தவேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைப்பு போட்டு கொள்வது நல்லது. எந்த நாள் என்பது நிச்சயமானதும் தங்களுக்கு தெரிவிக்கிறேன். இன்ஷா அல்லாஹ். தாங்கள் கோட்டாறில் பேசிய பேச்சின் கேஸட் கையில் கிடைக்கவில்லை கிடைத்தால் தங்களுக்கு அனுப்பித் தருகிறேன். இன்ஷா அல்லாஹ். எங்கள் ஜம்யிய்யாவின் சார்பாக ஒரு மலர் வெளியிட நாடியுள்ளோம். அதற்கு தாங்கள் ஒரு கட்டுரை அனுப்பித் தரவேண்டியது. Prof. அப்துல் மஜீது சாஹிப் அவர்களுக்கு என் சலாம் சொல்லுங்கள். மற்றவை தாங்கள் தலால் பார்த்து, அஸ்ஸலாம் அலைக்கும். கமாலுத்தீன்
இந்த கூட்டத்திற்கு கடையநல்லூர் சென்ற இடத்தில்தான் முதன் முதலாக P.J.யைச் சந்திக்கிறோம்.
இப்படி அவர்களாகவே எம்மைத் தொடர்புகொண்டு எம்மோடு வந்து இணைந்தனர். வழிகேட்டில் செல்லும் அனைத்துப் பிரிவினரினதும் இறுதி முடிவை படைத்த அல்லாஹ்விடம் விட்டுவிட்டு இவ்வுலகில் அவர்கள் அனைவரையும் முஸ்லிமாக ஏற்று ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக (21:92, 23:52) அரவணைத்துச் செல்ல வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழகிய முன்மாதிரி, சமுதாயத்தை ஆலிம்-அவாம் என பிரிக்கக் கூடாது. மார்க்கத்தைச் சொல்வதற்கு ஒரு சாரார். அதைக் கேட்பதற்கு ஒரு கூட்டம் என்று இஸ்லாத்தில் இல்லை. மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கக் கூடாது. இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி இல்லை. இப்படி இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாமல், நாம் எவற்றை சொல்லி வருகிறோமோ இவை அனைத்தும் 1984லேயே நாம் குர்ஆன், ஹதீஸ் மூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லாமல் விளங்கியவை. இவை அனைத்தும் 30.10.84 அன்று கிறிஸ்தவ குருக்குல மடத்திலேயே “மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இருக்கின்றன. அதுவே “பல்சமய சிந்தனை” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. அந்த நூலை படித்துவிட்டே S.K. P.J. போன்றோர் நம்மோடு இணைந்து பணியாற்ற முன்வந்தனர்.
எம்முடைய குறிக்கோள், இலட்சியம் இவை அனைத்தையும் நன்கு அறிந்த நிலையிலேயே நம்மோடு இணைந்து பணியாற்ற முன்வந்தனர் என்பதை அவர்களால் மறுக்க முடியாது. ஆனால் எமது இந்த முயற்சியை ஆரம்பித்து ஆறு மாதங்களிலேயே தமிழகம் மட்டுமல்ல. தமிழ் பேசும் முஸ்லிம்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம், எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மிக்கத்தக்க அளவில் அதிரடிப் புரட்சி ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அதனால், இந்த முயற்சியினால் தங்களின் புரோகித இனத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம், இந்த மவ்லவிகளை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிட்டது.
எனவே 1987 ஜனவரியில் கேரளா குட்டிபுரத்தில் நடைபெற்ற முஜாஹித்கள் மாநாட்டில் வைத்து முஜாஹித், அஹ்ல ஹதீஸ் மவ்லவிகளுடன் இணைந்து இந்த மவ்லவிகள் சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். எம்மை அந்நஜாத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, அதைக் கைப்பற்ற முற்பட்டனர். அதனால் எம்மீது அமானித மோசடி, நஜாத்திற்கு வந்த காசோலைகள்(செக்) கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை, மவ்லவிகளை தனது வீட்டு வேலையாட்கள் போல் நடத்துகிறார். இப்படி எல்லாம் அவதூறு பரப்பினார்கள். முடிவில் எம் பொறுப்பிலிருந்த அனைத்து அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, மவ்லவிகள் ஆறுபேரும், மவ்லவி அல்லாத மூன்று பேரும் என்று ஒன்பது பேர் கொண்ட அட்ஹாக் கமிட்டி அமைத்து, எம்மீது எப்படியும் குற்றம் சுமத்தி, அந்நஜாத்தை விட்டு வெளியேற்றிவிடுவது என்ற கடும் முனைப்புடன் கங்கணம் கட்டிக்கொண்டு பெரும்பாடுபட்டனர்.
இறுதியில் அவர்கள் சுமத்திய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் புஸ்வானமாகப் போய், தங்களின் முகத்திலேயே கரியைப் பூசிக் கொண்டனர். வரவுகள் அனைத்தும் முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளன. செலவுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டது என்று அவர்களே எழுதி கையெழுத்திட நேரிட்டது. இத்தனைக்கும் அந்நஜாத்தின் செலவுகளில் அந்நஜாத் அச்சடிக்கும் செலவு போக, எஞ்சியவை அனைத்தும் இந்த மவ்லவிகளுக்காக செலவிடப்பட்டவையே! ஆக, வேறு வழியின்றி மீண்டும் எம்மையே தலைவராக தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளானார்கள். எம்மை அந்நஜாத்தை விட்டும் வெளியேற்ற முற்பட்டார்கள், அதில் பெரும் தோல்விகண்டு, அவர்கள் அனைவரும் கூண்டோடு அந்நஜாத்தை விட்டு வெளியேறி, அந்நஜாத் நின்றுவிட்டது என்று அவதூறு பரப்பினர். மவ்லவிகள் அனைவரும் வெளியேறி விட்டதால், எம்மால் அந்நஜாத்தை நடத்த முடியாமல் நிறுத்தி விடுவோம் என பகல் கனவு கண்டனர். அப்படி பலருக்குக் கடிதமும் எழுதினர்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு முரணாக அல்லாஹ் தனது அருளைக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை 23 வருடங்களாக அந்நஜாத் தொய்வின்றி வெளி வர துணைபுரிந்து வருகிறான்.
“இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை” என்று தவ்ஹீத் மவிலவி(?) உறுதியளித்து, தமிழகமெங்கும் எம்மோடு பிரசார பணிபுரிந்தவர், எம்மைவிட்டு வெளியேறிய பின்னர், அபூ அப்தில்லாஹ்வை என்றுமே நான் அமீராக ஏற்றுக்கொண்டதில்லை; இதோ இருக்கிறாரே கமாலுத்தீன் மதனி, இவரையே எனது அமீராக ஏற்றிருக்கிறேன் என்று தமிழகமெங்கும் சொல்லித் திரிந்தார். இங்கு எம்மை அமீராக ஏற்றாரா? இல்லையா? என்பதல்ல பிரச்சினை.
“இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை” என அந்நஜாத்தில் எழுதி பகிரங்கப்படுத்தியவர். அதற்கு முரணாக, அந்த ஒன்றுபட்ட ஜமாஅத்தை பிளவுபடுத்தி ஜாக் பிரிவு இயக்கம் ஏற்படுத்தினாரா இல்லையா? என்பதே விவகாரம். 1986-ல் “நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தை பிளவுபடுத்தியது உண்மைதான்” என்பாரா? பதில் தருவாரா?
ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தை பிளவுபடுத்தி இரண்டாக்கியவர், அவரும் சேர்ந்து கற்பனை செய்த ஜாக் பிரிவு ஜமாஅத்தையும் விட்டு வெளியேறினார். இங்கு “கமாலுத்தீன் மதனியை என்றுமே நான் அமீராக ஏற்றுக்கொண்டதில்லை என்று பொய் சொல்லி தப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது. எனவேதான் அமீர் என்றால் ஆட்சி அதிகாரம் உள்ளவர் மட்டுமே. ஆட்சி அதிகாரம் இல்லாதவர்கள் அமீரே அல்ல; அவர்களின் ஜமாஅத்தை மீண்டும் பிளவுபடுத்தலாம்; இப்படியே பல பிரிவு ஜமாஅத்துகள் அமைக்கலாம் என்ற தனது மூடத்தனமான செயலை நியாயப்படுத்தவே, “அமீருக்கு கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற அபத்தக் களஞ்சியத்தை அன்று அல்முபீனின் அரங்கேற்றினார்.
மற்றபடி மக்களுக்கு சத்தியத்தை விளக்கவேண்டும் என்ற உயர்ந்த நன்நோக்கில் செய்யப்பட்டதல்ல இந்த ஆய்வு. ஆத்திரத்தில் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததால் அதில் அல்லாஹ்வையும், அவனது தூததையும் புறக்கணிக்கும். நையாண்டி செய்யும் பல அபத்தங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால்தான் அன்றே இந்த அபத்த ஆய்வை அலச முற்படவில்லை. ஆனால் அவரும் அவரது ஆதரவாளர்களும் இந்த ஆய்வை ஒரு சாதனையாகச் சொல்லித் திரிவதால், அந்த ஆய்விலுள்ள அபத்தங்களை, குர்ஆனுக்கு ஹதீஸுக்கும் முரணான அபத்தங்களை அம்பலப்படுத்தும் கட்டாயம் எமக்கேற்பட்டது.
குர்ஆன், ஹதீஸ் போதனைப்படி நான்கு மத்ஹபுகள் கூடாது, வழிகேடு என்பதை அறிந்து, அவற்றிலிருந்து வெளியேறி இன்று பல்வேறு தலைமைகளில் பல்வேறு இயக்கங்களில் பிரிந்து கிடப்பது சரியா? குர்ஆன், ஹதீஸை பற்றிப் பிடிப்பவர்கள் நிச்சயமாக ஓரணியில் ஒரே தலைமையில்தானே இருக்க முடியும். பல்வேறு இயக்கங்களில் இருப்பது கூடாதுதானே? வழிகேடுதானே? இப்படி மக்களை வழிகெடுத்து பல பிரிவுகளில்-இயக்கங்களில் குர்ஆன் ஹதீஸ்படி நடக்க முன் வந்தவர்கள் பிரிந்து கிடக்கவே, தவ்ஹீத் மவ்லவி(?) இந்த “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற வழிகேட்டு ஆய்வை செய்திருக்கிறார். பல்வேறு பிரிவு இயக்கங்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு முன்பிருந்ததைவிட பெரும் கேடுதான் விளைந்திருக்கிறது என்ற உண்மையை, இந்த அலசலை முழுமையாக, முறையாக, குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையுமு் பார்த்து நேரடியாக விளங்குகிறவர்கள் எளிதாக அறியமுடியும்.
**************************
அல்முபீனின்
அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு!
அல்முபீன் கூறுகிறது:
இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் ஏராளமான கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், கழகங்கள் மற்றும் சங்கங்கள் என பல்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன்றைய ஜனநாயக மரபுப்படி தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற அடிப்படையில் செயல்படக் கூடிய அமைப்புகளும் உண்டு. வெறும் தலைவரை மட்டும் வைத்து செயல்படக் கூடிய அமைப்புகளும் உண்டு. இந்த அமைப்புகளில் ஓர் உறுப்பினர் தங்கள் தலைவருக்குக் கட்டுப்பட மறுத்துவிட்டால் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதைச் சகித்துக் கொண்டு அந்த உறுப்பினர் அந்த அமைப்பில் நீடிப்பார் அல்லது விலகி விடுவார். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் ஒருவர் திருந்தவில்லை என்றால் அவர் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். இவையெல்லாம் அந்தந்த அமைப்புகள் கொண்டிருக்கக் கூடிய நிர்வாக சுதந்திரம். இந்த அமைப்புகளைப் பற்றி நாம் கண்டு கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அதே சமயம் வேறு சில அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் தம்மை இஸ்லாமிய அமைப்புகள் என்று வாதிடுகின்றன. இவ்வமைப்புகளில் தலைவருக்குக் கட்டுப்படுதலை மார்க்கத்தின் கடமைகளில் ஒன்று எனவும், அவ்வாறு கட்டுப்படாதவர் மார்க்கத்தை விட்டே வெளியேறி விடுவார் எனவும் கூறுகின்றன. அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்துகின்ற குர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் இவ்வமைப்புகள் தங்களுடைய வாதத்திற்குச் சான்றாக எடுத்து வைக்கின்றன. எனவே திருக்குத்ஆன், ஹதீஸ் ஒளியில் அமீர் மற்றும் அமீருக்குக் கட்டுப்படுதல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் முழுமையாக நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். எனவே அமீர் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அல்மூபீன் மார்ச். 99, பக்.3
இந்தப் பீடிகையோடுதான் தவ்ஹீத் மவ்லவி(?) தனது அபத்தக் களஞ்சியத்தை ஆரம்பித்துள்ளார்.
புரோகித மவ்லவிகளின் தந்திரம்!
பொதுவாக புரோகிதர்கள் மக்களை மயக்க, ஆரம்பத்தில் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்து எழுதி விடுவார்கள். அதன் பின்னரே தங்களின் நச்சு வழிகேட்டுக் கருத்துக்களைத் தந்திரமாகத் திணிப்பார்கள். தவ்ஹீத் மவ்லவி(?)யும் இத் தந்திரத்திலிருந்து விலக்குப் பெற்றவர் அல்ல. அந்த அடிப்படையில் அமீர் பற்றிய அந்நிஸா 4:59 அல்குர்ஆன் வசனத்தையும் புகாரீ, முஸ்லிமில் காணப்படும் ஐந்து ஹதீஸ்களையும் எடுத்து எழுதியுள்ளார். அவை வருமாறு:
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள். இன்னும் (அவனுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள். (அல்குர்ஆன் 4:59)
காய்ந்த திராட்சையைப் போன்ற தலையைக் கொண்ட அபிசீனிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக நியிக்கப்பட்டாலும், நீங்கள் அவருக்கு செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பர்:அனஸ்(ரழி), புகாரீ
உயர்வான அல்லாஹ்வின் நெறி நூலின்படி உங்களை வழிநடத்திச் செல்லும் கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் செவி சாயுங்கள், கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முல் ஹுஸைன்(ரழி), முஸ்லிம்.
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம். நாங்கள் எந்த நன்மையில் (இஸ்லாம்) இருக்கிறோமோ அந்த நன்மையை அல்லாஹ் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள்.” “அது எப்படி இருக்கும்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள், “எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் மனித உடல்களையும், கொண்ட ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலையை அடைந்துவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்த அமீர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி, உன் பொருளை பறித்துக் கொண்டாலும் நீ அவருக்கு செவிசாய்த்துக் கட்டுப்படு” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரழி), முஸ்லிம்.
பாவமான காரியத்தை ஏவாதவரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்கு செவிசாய்த்துக் கட்டுப்படுவது முஸ்லிமான ஒருவர்மீது கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ கட்டுப்படுவதோ கூடாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), புகாரீ, முஸ்லிம்.
அமீருக்குக் கட்டுப்படுபவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார் என்பது நபிமொழி. ஆதாரம்:புகாரீ.
எங்களது விருப்பிலும் வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும் இலகுவான சூழ்நிலையிலும் எங்கள்மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் எங்கள்மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள்(அமீருக்கு) செவிசாய்ப்போம்-கட்டுப்படுவோம் என்றும், அல்லாஹ்விடமிருந்து அமைந்திருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாதவரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போடமாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தோம். அறிவிப்பவர்:உப்பாதா பின் ஸாமித்(ரழி) புகாரீ, முஸ்லிம் (அல்முபீன் மார்ச் 99 பக்கம் 4,5)
அடுத்து அந்த இதழின் 6-ம் பக்கத்தில் அமீரை விட்டும் வெளியேறியவர் பற்றி கடுமையான எச்சரிக்கையை எடுத்து எழுதியுள்ளார். அது வருமாறு:
யார் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் யார் அமீரை விட்டு ஒரு சான் அளவு வெளியேறிவிட்டாலும் அவர் அறியாமைக்கால மரணத்தை தழுவுவார் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ. (அல்முபீன் மார்ச் 99, பக்.6)
தெளிவான் மார்க்கத்தில் குழப்பம் ஏன்?
அல்முபீனில் எடுத்தெழுதப்பட்ட இந்த குர்ஆன், வசனத்தையும், ஹதீஸ்களையும் இந்தப் புரோகித மவ்லவிகளின் சுய விளக்கம் இல்லாமல் நேரடியாக சுய சிந்தனையுடன் படித்து விளங்கினால் அமீர் என்றால் யார்? அந்த அமீருக்கு எந்தெந்த அடிப்படைகளில் கட்டுப்பட வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு, அல்குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டுவிட்டது. புரோகிதர்கள் சுயநலத்துடன் இட்டுக்கட்டிய கட்டுக் கதைகளான பலவீனமான ஹதீஸ்களும் அடையாளம் காட்டப்பட்டுவிட்டன. ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் வரையறுக்கப்பட்டுவிட்டன. மார்க்கம் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நயவஞ்சக புரோகிதர்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்து கொண்டு, புறந்தள்ளப்பட்ட கற்பனை செய்யப்பட்ட அந்த ஹதீஸ்களை குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் விரிவுரை என்ற பெயராலும், பிக்ஹு சட்டங்கள் என்ற பெயராலும் மீண்டும் புகுத்தி இருக்கிறார்கள். அதன் விளைவாக பல மர்ஹபுகள் கற்பனை செய்யப்பட்டுள்ளன. அல்லாஹ்வும், அவனது தூதரும் மிகமிக எளிதாக ஆக்கித் தந்த இஸ்லாமிய மார்க்கத்தை, இந்த நயவஞ்சகப் புரோகிதர்கள் மிகமிகக் கடினமானதாக ஆக்கியுள்ளனர். இப்படிக் கலப்படம் செய்யப்பட்ட மார்க்கத்தை சாதாரண மக்களால் விளங்க முடியாது. புரோகிதர்களாகிய நாங்கள்தான் விளக்க வேண்டும் என்று புருடாவிட்டு திருட்டுத்தனமாக சமுதாயத்தில் புகுந்து கொண்டார்கள்.
இப்புரோகிதர்கள் செய்துள்ள இந்த நயவஞ்சகச் செயலால், மார்க்கத்திலுள்ள எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும், அதற்கு நபி(ஸல்) காட்டித்தந்த உண்மையான ஹதீஸும் இருக்கும். அதே விஷயத்தைக் கூறும் இப்புரோகிதர்கள் இட்டுக் கட்டிய பல ஹதீஸ்களும் இருக்கின்றன. எனவே முஸ்லிம்களிடம் இந்த ஹதீஸ்களை எல்லாம் காட்டி இதில் சரியான ஹதீஸை உங்களால் கண்டு பிடிக்க முடியாது. நாங்களே ஆய்வு செய்து, கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்று நரித் தந்திரத்துடன் கூறுகிறார்கள் இப்புரோகிதர்கள்; பின்னர் தங்களுக்குச் சாதகமான இவர்கள் கற்பனை செய்துள்ள ஹதீஸ்தான் ஆதாரபூர்வமானது என்று கூறி முஸ்லிம்களில் ஒரு பிரிவினரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர்.
இப்படித்தான் வழிகேட்டைப் போதிக்கும் ஒவ்வொரு மத்ஹபும் உருவாகியுள்ளது. இந்த ஒவ்வொரு மத்ஹபும் உருவாகியுள்ளது. இந்த பிளவுகள், பிரிவுகள் ஏற்பட அடிப்படைக் காரணம், இந்த நயவஞசகப் புரோகிதர்கள் கற்பனை செய்து இட்டுக்கட்டி சமுதாயத்தில் பரவவிட்டிருக்கும் அடிப்படையே இல்லாத, பலவீனமான சுமார் பத்து இலட்சம் ஹதீஸ்கள்தான். சமுதாயத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி தங்கள் பிடிகளில் கொண்டுவர இந்தப் புரோகிதர்களுக்கு இந்த பத்து இலட்சம் பொய்யான ஹதீஸ்களே பெரிதும் உதவுகின்றன.
தவ்ஹீத் மவ்லவி(?)யின் இதுபோன்ற இன்னொரு தந்திரம்!
ஒன்றுபட்ட சமுதாயத்தை பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டும், சுய விளக்கங்களைக் கொண்டும் இந்த நயவஞ்சகப் புரோகிதர்கள், பல மத்ஹபுகளாக, பல இயக்கங்களாக கற்பனை செய்யப்பட்ட பல மத்ஹபுகளையும், இயக்கங்களையும் அவற்றின் தலைவர்களான அமீர்களையும் ஆதாரமாகக் காட்டி, இவர்களில் யாரை அமீராகக் கொண்டு அவருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்; அந்த அமீலை விட்டு வெளியேறக் கூடாது என்று நபி(ஸல்) கட்டளையிட்டிருக்கிறார்கள் என்ற ஐயத்தைக் கிளப்பியுள்ளார் தவ்ஹீத் மவ்லவி(?)
தடுமாற்றம் ஏன்?
இப்படி ஐயத்தைக் கிளப்பி அவர், ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அன்றைய புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்ட மத்ஹபுகளை மறுத்தாலும், இன்றைய இவர் போன்ற நயவஞ்சகப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள இயக்கங்களைச் சரிகாண்பதால், அந்த கற்பனை இயக்கங்களில் எந்த இயக்கத்தின் தலைவரை அமீராக ஏற்பது என்ற ஐயத்தைக் கிளப்பி, இறுதியில் ஆட்சி அதிகாரம் உள்ள அமீரையே நபி(ஸல்) கட்டளையிட்டுள்ள அமீராக ஏற்க வேண்டும், மற்றபடி இயக்கங்களின் அமீர்கள். அமீர்கள் அல்ல; அவர்கள் வெறுத்த தலைவர்கள் மட்டுமே; விரும்பும்போது நிராகரிக்கலாம்; புதுப்புது இயக்கங்களை கற்பனையாக உருவாக்கலாம் என்பதுதான் தவ்ஹீத் மவ்லவி(?)யின் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற அபத்தங்கள் நிறைந்த ஆய்வின் மூலம் நடுநிலையாளர் விளங்கும் உண்மையாகும்.
இதோ தவ்ஹீத் மவ்லவி(?)யின் வார்த்தைகளிலேயே படித்துப் பாருங்கள்;
ஆரம்பத்தில் நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனத்தையும்,ஹதீஸ்களையும் எடுத்தெழுதிவிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
இந்த ஹதீஸ்(இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ்) அமீரைவிட்டு ஓர் இஸ்லாமியக் குடிமகன் விலகிவிட்டால், அவருக்குக் கட்டுப்பட மறுத்துவிட்டால் அவன் மறுமையில் நரகம் புகுவான் என்பதை அறிவிக்கிறது.எனவே அமீருக்குக் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
மேலும் அமீருக்குக் கட்டுப்படுவது வணக்க வழிபாடுகள் போல் வற்புறுத்தப்பட்டுள்ளதை மேற்கண்ட சான்றுகள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. இது தலைவன் தொண்டனிடையே ஏற்படும் சாதாரண உறவுமுறை அல்ல. விரும்பினால் கட்டுப்பட்டுவிட்டு விரும்பாதபோது வெளியேறிவிடும் கட்சித் தலைனை போன்றதுமல்ல. மாறாக அமீரிடம் எத்தகைய குறைபாடுகளைக் கண்டாலும் அவரை விட்டுவிலகக் கூடாது; விலகுவது பாவம் என்ற அளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இது விஷயத்தில் கூடுதலான ஆய்வையும் கவனத்தையும் நாம் செலுத்தியாக வேண்டும்.
அமீருக்குக் கட்டுப்படுவதை அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அமீர் யார் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அமீரா? பலர் இருக்க முடியுமா? ஒரே ஒருவர்தான் என்றால் அந்த ஒருவர் யார்?
நாடுகள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் நாம் வாழுகிற இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அமீர் யார்?
அல்லது மாநிலம்தோறும், ஊர்கள்தோறும் அமீர்கள் இருக்கலாம் என்ற அந்த அமீர்கள் யார்? இதை எப்படி தீர்மானிப்பது,
ஒரு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான இயக்கங்கள், இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு அமீர்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு இயக்கமும் தத்தமது அமீருக்குக் கட்டுப்படுவதுதான் மார்க்கக் கடமை எனக் கருதுகின்றன பிரச்சாரமும் செய்கின்றன.
இன்னும் சொல்பதென்றால் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கு மேற்பட்ட இயக்கங்களாக உள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது.
அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆசைப்படுபவன் இந்தக் கேள்விகளால் குழம்பிப் போகிறான்.
அமீர்கள் என்ற பெயரில் மக்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை கலைக்கப்படுவதைக் கண்டு தடுமாறுகிறான்.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டிக் கட்டுக்கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக்கொள்கிறது.
ஆனால் நடைமுறையில் உள்ளது என்ன? ஏராளமான அமீர்கள் உருவாகும்போது சமுதாயம் ஏராளமான பிரிவுகளாக மாறுகின்றன. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் கண்ணுற்க கூடிய ஒரு உண்மை முஸ்லிம் குழம்பிடப்போகிறான்.
ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய ஒரு சித்தாந்தம் ஒருபோதும் வேற்றுமையை ஏற்படுத்தாது என்ற உணர்வோடு அமீருக்குக் கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும்; தெளிவு பிறக்கும். இன்ஷா அல்லாஹ். (அல்மூபீன் மார்ச் 99 பக்கம் 6,7)
நீண்ட பீடிகைக்குப் பின்!
இப்படி ஒரு நீண்ட பீடிகையைப் போட்ட தவ்ஹீத் மவ்லவி(?) என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? மேலே கண்ட குர்ஆன் வசனம், ஹதீஸ்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரம் உள்ள அமீர்களை மட்டுமே குறிக்கும். ஆட்சி அதிகாரம் இல்லாதவர்கள் அமீர்களே இல்லை என்று நிலைநாட்ட எஞ்சியுள்ள 48 பக்கங்களையும் தன்னுடைய அபத்தங்கள் நிறைந்த தில்லுமுல்லுகள் நிறைந்த, திரித்தல், வளைத்தல், மறைத்தல் நிறைந்த வாதங்களைக் கொண்டு நிரப்பியுள்ளார்.
51:55 சொல்லும் உண்மை!
அவற்றை அலசுவதே வீண் வேலை ஆயினும் அந்த அபத்த ஆய்வின் அலங்கோலங்களை,அவரது ஆதரவாளர்களில் அல்லாஹ் நாடிய ஒரு சிலராவது படித்துச் சிந்தித்துத் தெளிவு பெறலாம் என்ற நல்லெண்ணத்தில் அலசுகிறோம். அல்லாஹ்வின், அத்தாரியாத் 51:55 கட்டளைக்கு அடிபணிந்தே இப்பணியில் ஈடுபடுகிறோம்.
தவ்ஹீது மவ்லவி(?) ஆய்வு எப்படித் துவங்குகிறது என்று பாருங்கள்.
தலைமைப் பதவியும் அதன் வகைகளும் என்ற குறுந்த தலைப்பிலம, அமீர் என்றால் தலைவர் என்பதை நாம் அறிவோம். தலைவரைக் குறிப்பதற்கு, அமீரைப் போலவே வேறு சொற்களும் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. அவை கலீஃபா, இமாம், அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா, மலிக், சுல்தான், ஆமில் ஆகியவையாகும். எனவே இந்தச் சொற்கள் அனைத்தையும் முழுமையாக நாம் ஆய்வு செய்வதன் மூலம், அமீர் என்பதற்குரிய சரியான இலக்கணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.(ஆலமுபீன் மார்ச் 99, பக். 9)
எப்படி அணுகுவது?
உண்மையில் அவர் நேர்மையாளராக இருந்து, மக்களுக்கு சத்தியத்தைப் புரியவைக்கும் நல்ல நோக்கத்துடன் இந்த ஆய்வை செய்திருந்தால், “அமீர்” என்ற பதம் குர்ஆனிலும், ஹதீஸிலும் என்னென்ன அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே ஆய்வு செய்திருப்பார். ஆனால் அவரது குற்றத்தை மறைக்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதால், அமீர் என்றால் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே என்ற தனது குருட்டு வாதத்தை நிலைநாட்டவே, தனது ஆதரவாளர்கள், அண்ணன் தங்களுக்குப் புரியாத ஒரு பெரிய்ய்ய்ய தத்துவத்தை விளக்குகிறார் என்ற மயக்கத்தில் அதை கண்மூடி ஏற்கும் வகையில் சுற்றி வளைத்து எழுதுகிறார். அவரது சூன்யப் பேச்சில் கட்டுண்டு மயங்கிக் கிடப்பவர்கள்தானே அவரது ஆதரவாளர்கள்.
மற்றபடி “அமீர்” என்ற பதம் அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் என்னென்ன பொருள்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய, அவர் எடுத்து எழுதியுள்ள கலீஃபா, இமாம், மலிக், சுல்தான், ஆமில் போன்ற பதங்களை ஆராய வேண்டிய அவசியமே இல்லை அல்லது இவரைப் போன்ற யாராவது “அமீர்” என்ற பதம் “ஆட்சி அதிகாரத்தைக் குறிக்காது” என்று மறுத்துப் பேசி இருந்தால், அல்லது எழுதி இருந்தால், அதற்குப் பதிலாக இந்த பெரிய்ய்ய்ய ஆய்வை செய்து அமீர் என்ற பதம் ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கும் என்று நிலைநாட்டியிருந்தால் அவரைப் பாராட்டலாம்.
விவகாரம் என்ன?
ஆனால் இங்கு அதுவல்ல விவகாரம். “அமீர்” என்ற பதம் ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறிக்குமா? அல்லது குறைந்தது மூன்று பேர் இணைந்து ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, தங்களுக்குள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க இந்த மூவரில் ஒருவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தால் அவர் அமீரா இல்லையா என்பதுதான் விவகாரம். ஆனால் தவ்ஹீத் மவ்லவி(?)யிடம் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்க, அவர் கொட்டைப்பாக்கிற்கு விலை சொன்ன கதையாக அவரது ஆய்வு(?) இருக்கிறது.
தவ்ஹீத் மவ்லவி(?)யின் இந்த 56 பக்க ஆய்வின் இலட்சணத்தை சுருக்கமாக இவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்.
ஆய்வின் சுருக்கம்!
ஒருவன் நூறு வகையான கிளிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவை அனைத்தினதும் நிறம் பச்சை எனக் குறிப்பிட்டு, எனவே பச்சையாக இருப்பவை அனைத்தும் கிளிகள்தான் என்று நிலைநாட்ட முற்பட்டால் அவனை எந்த அளவு வடிகட்டிய மூடன் என்போமோ, அல்லது,
அவன் நூறு வகை காகங்களைப் பட்டியலிட்டு அவை அனைத்தும் கருப்பு நிறம் என நிலைநாட்டி, எனவே கருப்பாய் இருப்பவை அனைத்தும் காகங்களே என வாதிட்டால், அவனை எந்த அளவு வடிகட்டிய மூடன் என்போமோ, அல்லது,
ஒருவன், பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இதுவரை நிறைவேற்றப்பட்ட ஆயிரம் சட்டங்களைப் பட்டியலிட்டு, எனவே சட்டங்கள் என்றால் பாராளுமன்றத்திலோ, சட்டசபைகளிலோ இயற்றப்பட்டிருக்க வேண்டும்; தச்சர் ஜன்னலுக்காக செதுக்கியதை சட்டம் என்று சொல்லுவது பெரும் தவறு என்று கூறினால், அவனை எந்த அளவு வடிகட்டிய மூடன் என்போமா;
அது போன்தொரு மூடத்தனமான வாதத்தை, அன்றைய ஆட்சியாளர்களால் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு, எனவே “அமீர்” என்றால் ஆட்சியாளர்களால், ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே என்று தவ்ஹீத் மவ்லவி(?) உளறியிருக்கிறார்.
நல்ல நோக்கம் இருந்தால்!
தனது குற்றத்தை மறைக்கும் தீய நோக்கமில்லாமல், மக்களுக்கு உண்மையை-சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்ற நன்நோக்குடன் இந்த “அமீர்” பதத்தை இவர் ஆராய முற்பட்டடிருந்தால், இவரே முதல் முதலாக எடுத்து எழுதியுள்ள அன்னிஸா 4:59 இறைக் கட்டளையை நடுநிலையோடு அணுகி இருப்பார்.
ஆனால் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடன், இறையச்சமின்றி அந்த இறைவாக்கை அந்த இதழின் 25-ம் பக்கம் எப்படி மொழிபெயர்த்து, தனது சூன்ய பேச்சில் கட்டுண்டு கிடக்கும் தனது ஆதரவாளர்களை எப்படி ஏமாற்றி வஞ்சிக்கிறார் என்று பாருங்கள்.
25-ம் பக்கத்தில் மீண்டும் 4:59 இறைவாக்கை எடுத்து எழுதிவிட்டு, அவர் வைக்கும் விதண்டா வாதத்தைப் பாருங்கள்.
அமீருக்கு கட்டுப்படுவதை வலியுறுத்தும் அல்லாஹ்வின் கட்டளை இது. “அமீருக்குக் கட்டுப் படுங்கள்” என்று இறைவன் கூறாமல் ‘உலில் அம்ரி’ என்று கூறுகிறான்.
உலூ என்றால் உடையவர்கள் என்று பொருள் “அம்ர்” என்றால் அதிகாரம் என்று பொருள். ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்குக் கட்டுப்படுவதைத்தான் இவ்வசனம் கூறுகிறது என்பதில் இரண்டாவது கருத்தே இருக்க முடியாது.
“அதிகாரம் உடையவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்கும்போது அதிகாரம் இல்லாதவர்கள் தங்களுக்கு மக்களைக் கட்டுப்படவைக்க இவ்வசனத்தைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் செய்யப்படும் மிகப் பெரிய மோசடியாகும்.
மேலும் அமீர் என்ற வார்த்தைக்கு அகராதியில் அதிகாரம் உடையவர் என்றே பொருள். அகராதியின் பொருளும் அல்லாஹ் பயன்படுத்திய வாசக அமைப்பின்படியும் அமீர் என்பவர் ஆட்சி அதிகாரம் உடையவரே! அவ்வாரில்லாதவர் ஒருபோதும் அமீராக மாட்டார். அதற்கான ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம். அல்முமீன் மார்ச். 99 பக் 25.
வெற்றுப் பட்டியல்!
இவ்வாறு எழுதிவிட்டு, நாம் முன்னர் குறிப்பிட்டுள்ளபடி ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அமீர்களைப் பற்றி ஒரு நீண்ட பட்டியலை பல பக்கங்களில் நீட்டி முழக்கி இருக்கிறார். அவற்றில் நாம் விமர்சிக்க வேண்டியது ஒன்றுமில்லை, ஆட்சியாளர்களால் வெவ்வேறு பணிக்காக நியமிக்கப் பட்டவர்களும் அமீர்களே என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அல்லவா அவற்றை விமர்சிக்க நேரிடும், ஆனால் அவற்றில் சிலவற்றில் தனது திரிபு வேலையைக் காட்டியுள்ளார். அவற்றைப் பின்னர் பார்ப்போம்.
இங்கு அவர் எடுத்து எழுதியுள்ளதைக் கவனமாகப் பாருங்கள். “அமீர்களுக்குக் கட்டுப்படுங்கள்” என்று இறைவன் கூறாமல் “உலில் அம்ர்” என்று கூறுகிறான் என எழுதியுள்ளார்.
“அமீருக்குக் கட்டுப்படுங்கள்” என்று தமிழில் அல்லாஹ் கூறாமல் அரபியில் “உலில் அம்ரி” என்று கூறிவிட்டான் என்று அல்லாஹ்வையே நையாண்டி செய்துள்ளார். தவ்ஹீத் மவ்லவி(?)
உலூ என்றால் உடையவர்கள் என்று பொருள் “அம்ரு” என்றால் அதிகாரம் என்று பொருள். ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்குக் கட்டுப்படுவதைத்தான் இவ்வசனம் கூறுகிறது என்பதில் இரண்டாவது கருத்தே இருக்க முடியாது என்று தெனாவட்டாக தவ்ஹித் மவ்லவி(?) எழுதி இருக்கிறாரே! அம்ரு என்ற பதத்திற்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று எந்த அகராதியிலிருந்து எடுத்தார்? காட்டுவாரா?
அவர் நடுநிலையோடு, உள்ளச்சத்தோடு இந்த 4:59 இறைவாக்கை அணுகி இருந்தால் இந்த “அம்ரு” என்ற பதம் பல திரிபுகளில் அல்குர்ஆனில் சுமார் 180 இடங்களில் வருகிறது. கட்டளை, ஏவல், காரியம், அதிகாரம் போன்ற பல பொருள்களில் வந்திருப்பதை அவர் அறிந்திருக்க முடியும்.
மடமை வாதம் ஏன்?
அவரது வழிகேட்டுக் கொள்கைகளை நிலைநாட்டும் கெட்ட நோக்கத்துடன் குர்ஆன், ஹதீஸை அவர் ஆராய்வதால்தான் இப்படிப்பட்ட மூடத்தனமான வாதங்களை எடுத்து வைக்கிறார். பிறை விஷயத்தில் “ருஃயத்” கண்ணால் பார்ப்பது மட்டுமே. “அமரஹும்” என்ற பதம் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். இவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று இடத்திற்கேற்ப பொருள் கொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக அவர்களுக்குத்தான் கட்டளையிட்டார்கள் என்று கூறியதால் ஏற்பட்ட நியாயமான பத்து கேள்விகளுக்கு கடந்த எட்டு வருடங்களாகப் பதில் அளிக்க முடியாமல் வாயடைத்துப் போயிருக்கிறார். இப்படி பல விஷயங்களில் அவரது வழிகேட்டு கொள்கையை நிலைநாட்ட மூடத்தனமான விளக்கங்களைக் கொடுத்து வாங்கிக் காட்டிக் கொள்கிறார்.
அல்குர்ஆனில் “அம்ர்”!
இப்போது இந்த “அம்ர்” என்ற பதம் அல்குர்ஆனில் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம். நாம் பார்த்தவரை சுமால் 180 இடங்களில் இந்த “அம்ர்” பதம் பல்வேறு திரிபுகளில் இடம் பெற்றுள்ளது. கட்டளை, ஏவல், விவகாரம், காரியம், அதிகாரம் போன்ற பல பொருள்களில் இடம் பெற்றுள்ளது.
தவ்ஹீத் மவ்லவி(?) எடுத்து எழுதிய 4:59 இறைவாக்கில் பொதுவாக “அதிகாரம்” உடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே அல்லாமல் “ஆட்சி அதிகாரம் உடையவர்கள்” என்று இவர் பொருள் கொண்டிருப்பது அல்குர்ஆனில் இவர் செய்யும் மாபெரும் மேசடியாகும். இந்த 4:59-லுள்ள “உலுல் அம்ர்” என்ற பதம் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிக்கும் என்றால் அந்த விளக்கத்தை யார் தரவேண்டும்? அல்குர்ஆனுக்கு விளக்கம் தர கடமைப்பட்ட (2:213, 16:44,64) நபி(ஸல்) அவர்கள் அப்படியொரு விளக்கத்தைத் தந்திருக்கவேண்டும். தவ்ஹீத் மவ்லவி(?)யால் அப்படி ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸை காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது.
குர்ஆனிலோ, ஹதீஸிலோ இல்லாத ஒன்றை இவர் தனது கற்பனை வளம். நாவன்மை, சூன்ய பேச்சு இவை கொண்டு மார்க்கமாக்கினால், 42:21 இறை எச்சரிக்கைப்படி அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆகும் கொடிய பாவியா இல்லையா? இவரது சூன்ய பேச்சில் கட்டுண்டு இவரது இந்த ஷிர்க்கான சுய விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள், அவரை அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆக்கி முஷ்ரிக்கீன் ஆகும் பெரிய குற்றத்திற்கு ஆளாகிறார்கள் இல்லையா? இவரை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை இவர் எந்த அளவு வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார் என்பதை நிதர்சனமாக உணர்கிறவர்கள், இவரது முகத்திரையைக் கிழித்து, மக்களுக்கு இவரை அடையாளம் காட்டும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவதை நடுநிலையாளர்கள் மறுக்க முடியுமா?
உலுல் அம்ர்-அதிகாரம் உடையவர் எனறால் ஆட்சி அதிகாரம் மட்டும்தான் என்ற பொருள் இல்லை. முல்க், ஹுகூமத் போன்ற பதங்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறிக்கும். அவர் அந்த இதழின் 9-ம் பக்கத்தில் எழுதியுள்ள அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா போன்ற பதங்களே வெறுமனே “அமீர் என்றால் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிக்கும் என்று கூறுவது மடமையாகும் என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக உணர்த்துகிறது.
ரிஸாத்தும், ஸியாஸத்தும்!
இந்தத் தலைப்பில், நபி(ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும் இருந்தும் கூட அவர் அமீர் என்று நபி தோழர்களால் அழைக்கப்படவில்லை. ஆட்சித் தலைவர் என்ற பொறுப்பைக் குறிக்கும் எந்த வார்த்தையையும் (ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தாமல் இருந்ததற்குக் காரணங்களும் இருந்தன.
முக்கியமான காரணம் என்னவென்றால் நபி(ஸல்) அவர்கள் நடத்திய ஆட்சி தமது சுய விருப்பத்தின்படி நடத்திய ஆட்சி தமது சுய விருப்பத்தின்படி நடத்திய ஆட்சியல்ல; மாறாக தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை இறைவனின் புறத்திலிருந்து பெற்ற்து போல் அரசு நடத்துவதற்கான சட்டங்களையும் அந்த இறைவனிடமிருந்தே பெற்றார்கள். “அல்லாஹ்வின் தூதர்” என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வின் ஆணைப்படி வணக்க வழிபாடுகளைக் கற்றுத் தந்து நடைமுறைப் படுத்துபவர் என்பது மட்டும் பொருளன்று. அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆட்சி நடத்துபவர் என்ற பொருளும் சேர்ந்ததுதான் அல்லாஹ்வின் தூதர் என்பதன் பொருள்.
எனவேதான் அமீர், கலீஃபா, சுல்தான், அமீருல் முஃமினீன் என்பது போன்ற வார்த்தைகளால் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடப்படவில்லை. அரைவிட விரிந்த அதே சமயம் ஆட்சித் தலைமையையும் உள்ளடக்கிய ரசூலுல்லாஹ்-அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டனர். ரிஸாஸத்-னுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
பஷீரே! அமீர்கள் தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ கஃலபா கேட்டார். நான் நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவை மனனம் செய்திருக்கின்றேன் என்று கூறி ஹுதைபா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபித்துவம் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் என அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும்போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாபத் ஆட்சி முறையாக அமையும். அல்லாஹ் எந்த அளவு நாடியிருக்கிறானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும்போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு அது கடினமான மன்னராட்சியாக அமையும், அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியிருக்கிறானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும்போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாபத் ஆட்சியாக அமையும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறி முடித்து அமைதியாகிவிட்டார்கள்.ஆதாரம்: அஹமத்
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் ஆட்சி முறையைப் பற்றி அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். எனினும் தன்னுடைய ஆட்சி முறையைப் பற்றிக் குறிப்பிடும்போது நபித்துவம் இருக்கும் என்றே குறிப்பிடுகிறார்கள். எனவே அவர்களை அல்லாஹ்வின் திருத்தூதர் என்ற பெயரைத் தவிர வேறு ஆட்சி முறைகளைக் குறிப்பிடும் எந்த அடைமொழியிலும் அழைப்பது சரியல்ல என்பதை உணரலாம்.
இவ்வாறு ரிஸாஸத்தை அடிப்படையாகக் கொண்டு ரசூல்(ஸல்) அவர்கள் மட்டும் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள் இப்படித்தான் ஆட்சி செலுத்தியுள்ளார்கள்.
இஸ்ரவேலட நபிமார்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகப்படியாகிவிடும், என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப் போகிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர்களில் முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை செய்தீர்களோ, அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள். அவர்களுடைய கடமையை அவர்களுக்குச் செலுத்திவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களை கண்ணியத்தைப் பற்றி அவர்களிடமே விசாரணை செய்வான் என்று பதில் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரீ.
இவ்விரு ஹதீஸ்களும் ரிஸாஸத் என்பதில் ஸியாஸத் (அரசியல் தலைமை)யும் அடங்கும் என்பதற்கு தெளிவான சான்றுகளாக உள்ளன.(அல்மூபீன் மார்ச் 1999, பக்.9,10,11)
புரோகித புத்தி!
பொதுவாக புரோகிதர்களின் மிகவும் கேடுகெட்ட புத்தி என்னவென்றால், ஒரு குர்ஆன் வசனம் அல்லது ஒரு ஹதீஸ் நேரடியாக என்ன சொல்கிறதோ அதை கண்டுகொள்ளமாட்டார்கள்; அல்லது மக்களிடமிருந்து அந்த நேரடியான கருத்தை மறைத்துவிடுவார்கள். அந்த ஆயத்திற்கோ, ஹதீசுக்கோ சம்பந்தமே இல்லாத ஒன்றை தங்களின் சுய விளக்கமாக மக்களிடம் சொல்வார்கள்.
மக்களும் ஆதத்தின் சந்ததிகள்தானே. எப்படி ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையான குறிப்பிட்ட மரத்தின் கனியை சாப்பிடக் கூடாது என்பதை விட ஷைத்தானின் சூழ்ச்சிகரமான் சுய விளக்கம் (பார்க்க 7:20-22) அழகானதாகவும், சரியானதாகவும் தெரிந்ததோ அதேபோல், அல்லாஹ்வின் அவனது தூதரின் நேரடிக் கட்டளைகளை விட சுய விளக்கம்தான் அழகாகவும், சரியாகவும் தெரிகிறது.
தவ்ஹீது மவ்லவி(?) எழுதி இருக்கும் இரண்டு ஹதீஸ்களும் ரிஸாஸத்தில் ஸியாஸத்தும் அதாவது நபிமார்கள் அரசியல் தலைவர்களாகவும் இருந்தார்கள் என்பதைச் சொல்லும் ஹதீஸ்கள் அல்ல. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு என்னென்ன நடக்கும். அப்போது முஸ்லிம்கள் எப்படி நடக்க வேண்டும் என்று கூறும் முன்னறிவிப்புகளைத் தாங்கிய ஹதீஸ்களாகும்.
அல்லாஹ்வின் தூதர் என்ற ஆக உயர்ந்த பதவிக்கு முன்னால் இந்த முழு உலகின் ஆட்சி அதிகாரம் ஒரு கொசுறு. ஒரு ஈயின் இறக்கை அளவு கூட அல்லாஹ்விடம் மதிப்பு கிடையாது. அப்படி மதிப்பு இருக்குமானால் இறைவனுக்கு இணை வைக்கும், நிராகரிக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கவே மாட்டான்.(பார்க்க 13:26, 43:33-35)
இந்த இரண்டு ஹதீஸ்களை வைத்து ரிஸாஸத்தினுள் ஸியாசத்(அரசியல்) உண்டு என்றால், நபிமார்கள் அனைவரும் ஆட்சித் தலைவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். நபிமார்களில் விரல்விட்டு எண்ணும் அளவு ஒரு சிலரே ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார்கள் என்பதே அவரே மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் ரிஸாஸத்தில் ஸியாஸத்தும் உள்ளடங்கி இருக்கிறது என்ற அறிவீனமான வாதத்தை அன்று ஏன் வைத்தார் தெரியுமா!
ஒப்புதல் வாக்குமூலம்!
1986-ல் “இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து “ஒன்றுபட்ட ஒரே முஸ்லிம் ஜமாஅத்” என்பதை ஒப்புக்கொண்டு அந்நஜாத் மாத இதழில் பணி புரிந்ததோடு தமிழ்நாடு முழுவதும் பிரசார பணியும் செய்தோம். அப்போது ஏற்பட்ட பிரம்மிக்கதக்க இஸ்லாமிய எழுச்சி ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த தவ்ஹீத் மவ்லவியும்(?) இவரைச் சார்ந்த மவ்லவிகளும் தங்களின் புரோகித இனம் அழிந்து இல்லாமல் போய்விடும் என பயந்து, தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள 1987-ல் நம்மைவிட்டு வெளியேறினர். அவசர அவசரமாகப் புரோகிய மதரஸாவும், ஜம்யியத்து அஹ்லுல்குர்ஆன் வல் ஹதீஸ்(ஜாக்) என்ற பிரிவு இயக்கத்தையும் அமைத்தனர். அப்போது அபூ அப்தில்லாஹ்வை நான் அமீராக என்றுமே ஏற்றுக் கொண்டிருக்கவில்லை; இதோ இருக்கிறாரே கமாலுத்தீன் மதனீ இவரையே அமீராக ஏற்றுள்ளேன் என்று பகிரங்கமாக பொய்யாக அறிவித்துத் திரிந்தார்.
அடுத்த படலம்!
1998க்குப் பிறகு கமாலுத்தீன் மதனியை விட்டும் ஜாக்கை விட்டும் வெளியேறும்போது, முன்னர் 1987-ல் கூறியது போல் கமாலுத்தீன் மதனியை என்றுமே அமீராக நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று 1987-ல் பொய் சொன்னதுபோல் 1998 பொய் சொல்ல முடியவில்லை. எனவேதான் இந்த “அமீர்” பற்றிய கேடுகெட்ட சிந்தனை தவ்ஹீத் மவ்லவி(?)க்கு ஏற்பட்டது. எனவே தனது குற்றச் செயலை நியாயப்படுத்த ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டும்தான் “அமீர்” ஆம முடியும், கமாலுத்தீன் மதனியிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறதா? என்று கேட்டு தனது ஆதரவாளர்களை மயக்கத்தில் ஆழ்த்தினார்.
நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராகத்தானே இருந்தார்கள். அவர்களை அமீர் என்று அழைக்கப் படவில்லையே! என தனது ஆதரவாளர்களுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் சம்பந்தமில்லாத இந்த இரண்டு ஹதீஸ்களை எடுத்துப் போட்டு ரிஸாஸத்தில் ஸியாசத்தும் உண்டு பிதற்றி தனது ஆதரவாளர்களை ஏமாற்றினார். நபிமார்கள் அனைவரும் ஆட்சியாளர்களாக இருக்க வில்லையே என்பது அவரது அவசார, ஆத்திர புத்தியில் படவில்லை.
தவ்ஹீத் மவ்லவி(?)யின் பிதற்றல்கள் நிறைந்த இந்த ஆய்வுக்கு நாம் அந்நஜாத்தில் மறுப்பு வெளியிடவில்லையே என அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வற்புறுத்தி வந்தனர். அதை நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த சகோதரர்கள் இப்போது “அமீர்” என்றால் ஆட்சி அதிகாரம் உடையவர் மட்டுமே! அப்படி என்றால் பாடுபட்டு கிலாஃபத்தை-ஆட்சி அதிகாரத்தை அடைந்தால்தான் முஸ்லிம் சமுதாயத்தை அடைத்தால்தான் முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றுபடுத்த முடியும்; அந்த ஆட்சி அதிகாரமுள்ள அமீருக்குத்தான் முஸ்லிம்கள் கட்டுப்பட்டு ஒன்றுபட்டு நடப்பார்கள். ஆளுக்கொரு அமைப்பை இயக்கத்தை அமைக்க முற்படமாட்டார்கள் என்று கிலாஃபத்துக்காக பாடுபட முற்பட்டு விட்டார்கள். ஆட்சி அதிகாரமுள்ள அமீருக்கு மட்டுமே கட்டுப்படவேண்டும். அந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறி அதைப் பிளவுபடுத்தக் கூடாது என்ற இந்த தவ்ஹீத் மவ்லவி(?)யின் துர்போதனை சில வாலிபர்களை இப்படி முடுக்கிவிட்டிருக்கிறது.
அந்தர் பல்ட்டி!
1999-ல் ரிஸாஸத்தும் உண்டு – நபிமார்கள் ஆட்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்று பிதற்றியவர், இன்று 2008-ல் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்.
ஏகத்துவம் பிப்ரவரி-2008 பக்கம் 21 கேள்வி-பதில் பகுதி:
?ஒற்றுமை மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தவே வந்தார்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இவர்கள் ஜனநாயக முறையை முழுக்க முழுக்க எதிர்க்கிறார்கள். இந்தக் கொள்கையைப் பற்றிய முழு விளக்கத்தையும், இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும். இஸ்மாயீல், துபை (ஏகத்துவம் பிப்ரவரி 2008, பக். 21)
இப்படி அவரது பத்திரிகைகளில் கடந்த 21 ஆண்டுகளில் அந்நஜாத் பெயரைப் போட்டு நம்மை விமர்சிக்கும் துணிச்சல் தவ்ஹீத் மவ்லவி(?)க்கு ஏற்பட்டதுண்டா? நிச்சயமாக ஏற்படாது. தனது ஆதரவாளர்கள் தப்பித்தவறியும் “அந்நஜாத்” என்றொரு மாத இதழ் வருகிறது என்பதை அறிந்துவிடக் கூடாது என்பதில் மிகமிகக் குறியாக இருக்கிறார். தனது ஆதரவாளர்கள் அந்நஜாத்தைப் பற்றித் தெரிந்து, அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்து விட்டால், தனது சாயம் வெளுத்துவிடும்; தனது வண்டவாளங்கள், தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற தொடை நடுக்கம் கடந்த 21 ஆண்டுகளாக அவருக்கு இருந்து வருகிறது என்பதே நிதர்சன உண்மை. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த கேள்விக்கு என்ன பதில் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
1999-ல் ரிஸாஸத்தில் ஸியாசத்தும் உள்ளடங்கியது. நபிமார்கள் அனைவரும் ஆட்சி அதிகாரம் பெற்ற அமீர்களாக இருந்தும் அவர்கள் ரசூல் என்றே அழைக்கப்பட்டார்கள் என்று எழுதி அன்று பல பக்கங்களை வீணடித்தவர் இன்று 2008 பிப்ரவரிகில் நபிமார்கள் அனைவரும் ஆட்சியாளர்கள் அல்ல என்று அவரே அவருக்கு முரண்பட்டு ஆதாரம் கொடுத்துள்ளார்.
இதோ பாருங்கள் :
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதுதான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருகுர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.
இப்படித் தொடரும் தவ்ஹீத் மவ்லவி(?)யின் பதில் பல நபிமார்கள் ஆட்சி அதிகாரம் பெற்றவர்களாக இருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிலைநாட்டுகிறது. அதற்காக ஐந்து பக்கங்களை நிறைத்துள்ளார்.
நமக்கு ஏற்படும் சந்தேகம்!
நமக்கு ஏற்படும் பெரிய ஐயம் 1999-ல் ரிஸாஸத்தில் ஸியாசத்தும் அடக்கம். நபிமார்கள் எல்லாம் ஆட்சித் தலைவர்களாகவும் இருந்தார்கள் என கச்சையைக் கட்டிக்கொண்டு வாதிட்டவர், இன்று 2008-ல் நபிமார்கள் அனைவரும் ஆட்சித் தலைவர்கள் அல்ல என்பதற்கு ஆதாரம் அவரே தந்திருப்பதுதான். அன்று இந்த ஆதாரங்களை நாம் எடுத்துக் கொடுத்திருந்தால் தவ்ஹீத் மவ்லவி(?) ஏற்றிருப்பாரா? உலக ஆதாயத்தைக் குறியாகக் கொண்டிருக்கும் இப்புரோகிய மவ்லவி(?)கள், மார்க்கம் இவர்கள் அப்பன், பாட்டன் சொத்து என்ற நினைப்பில், அவர்களுக்குத் தேவைப்பட்டால் ஒன்றை ஹராம் என்பார்கள்; பின்னர் தேவைப்படும்போது அதையே ஹலால் என்பார்கள் என்று நாம் கூறி வருவதற்கு இது ஒரு வலுவான ஆதாரமாகும். முன்னர் மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவது கூடாது; யாஸீன் 36:21 இறை கட்டளைப்படி கூலிக்கு இமாமத் செய்பவர்கள் பின்னால் தொழக் கூடாது என்று அன்று ஃபத்வா-தீர்ப்புக் கொடுத்தவர் இப்போது மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கலாம் என்று சொல்லி வருவதும் புரோகிதர்கள் பற்றிய எமது இந்தக் கூற்றை உறுதிப்படுத்துகிறது.
அன்று 1999-ல் ரிஸாஸத்தில் ஸியாசத்தும் உண்டு என்று சம்பந்தமில்லாத இரண்டு ஹதீஸ்களைக் காட்டி நபிமார்கள் ஆட்சித் தலைவர்களாகவும் இருந்தார்கள் என்ற மூடத்தனமான வாதத்தை ஏன் வைத்தார் என்றால், அன்று ஆட்சி அதிகாரம் உள்ளவர்களை மட்டுமே “அமீர்” என்று சொல்ல முடியும் என்ற மடமை வாதத்தை நிலைநாட்டும் கட்டாயம் அவருக்கு இருந்தது. அப்படியானல் நபிமார்கள் அனைவரையும் தலைவர்களாக (அமீர்) ஏற்று அவர்களது கட்டுப்பாட்டில் மக்கள் இருந்திருக்கிறார்களே, அந்த நபிமார்கள் அனைவரும் ஆட்சித் தலைவர்களாகவும் இருந்தார்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறதல்லவா? இந்த நியாயமான சந்தேகத்திற்குப் பதிலாகத்தான் ரிஸாலத் என்பதில் ஸியாசத் (அரசியல் தலைமை)யும் அடங்கும் என்ற மடமை வாதத்தை வைத்து தனது ஆதரவாளர்களை தக்கவைக்க முடிந்தது.
துர்போதனையின் விளைவு!
ஆனால் இன்று 2008-ல் தவ்ஹீத் மவ்லவி(?)யின் மடமை வாதத்தை எவ்வித சுயபுத்தியும் இல்லாமல் குருட்டுத்தனமாக நெஞ்சில் பதியவைத்துக் கொண்டவர்கள், ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் ஒற்றுமை ஏற்படுத்த முடியும்- “இது ஆட்சி அதிகாரம் உள்ள அமீருக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்க வேண்டும்; அவரை விட்டு வெளியேறி பிளவை ஏற்படுத்தக் கூடாது” என்ற இந்த தவ்ஹீத் மவ்லவியின் மடமை ஃபத்வாவால் ஏற்பட்ட நிலையாகும்- நபிமார்கள் ஆட்சி அமைக்கவே வந்தரர்கள் என்ற தவறான எண்ணத்தில் “கிலாஃபத்” என்ற அமைப்பில் இந்த தவ்ஹீது மவ்லவி(?)யின் ஆதரவாளர்களில் பலர் போய் சேருகிறார்கள்; அவர்களைத் தக்கவைக்கவே அன்றைய பத்வாவுக்கு நேர்முரணான இன்றைய ஃபத்வா – தீர்ப்பு. ஆக அல்லாஹ்வுக்கே முழுக்க முழுக்க சொந்தமான தூய மார்க்கத்தை (பார்க்க 39:3) தவ்ஹீத் மவ்லவி(?) தனது அப்பன், பாட்டன் சொத்து என நினைத்துக்கொண்டு புகுந்து விளையாடுகிறார். தவ்ஹீத் மவ்லவி(?) அல்குர்ஆன், முஹம்மது 47:25 இறைவாக்கைப் படித்து விளங்கினால். அது அவருககும் நல்லது. அவரை நம்பி அவர் பின்னல் செல்லும் சகோதர, சகோதரிகளுக்கும் நல்லது. அது வருமாறு:
நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்றுவிட்டார்களோ,அவர்களை ஷைத்தான் மயக்கிவிட்டான். அன்றி அவர்களுடைய தப்பெண்ணங்களையும் அதிகப்படுத்தி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்.(47:25)
1986-ல் தவ்ஹீத் மவ்லவி(?) “இஸ்லாம் அல்லாத இயக்கம்” எங்களுக்கு இல்லை என்று உறுதி அளித்து நேர்வழிக்கு வந்தவர். அற்ப உலக ஆசையால், மீண்டும் பல இயக்க வழிபாட்டுக்குத் திரும்பிவிட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தவ்ஹீத் மவ்லவி(?)யிடம் இப்போது நாம் கேட்கிறோம். அன்று ஆட்சி அதிகாரம் உள்ளவர்களை மட்டுமே அமீராக ஏற்க முடியும் என்றீர்களே? இப்போது அது பொய் என்று உங்களின் எழுத்து மூலமே நிரூபணமாகிவிட்டதே? தவறுக்கு வருந்தி நீங்கள் தவ்பா செய்யத் தயாரா? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
அடுத்து “அல்முபீன்”, அந்த இதழின் பக்கங்கள் 12லிருந்து 18வரை கிலாஃபத், இமாம், அமீருல் முஃமீனின் போன்ற தலைப்புகளில் பக்கங்களை நிரப்ப ஏதேதோ எழுதி தன்னை நம்பியுள்ளவர்களை ஏமாற்றி இருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள “அமீரூல் முஃமினீன்” என்ற தலைப்பே “அமீர்” என்ற பதம் அவருக்குக் கொடுக்கப்படும் அதிகாரம் அடிப்படையில் பொருள்படும்; மற்றபடி தவ்ஹீத் மவ்லவி(?) கூறுவதுபோல் ஆட்சி அதிகாரம் பெற்றவரை மட்டுமே குறிக்காது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அவராலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தமில்லா ஆதாரங்கள்!
அடுத்து 19-ம் பக்கத்திலிருந்து 37-ம் பக்கம் வரை, “அமீர்” என்றால் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே என்பதற்கும். ஆட்சி அதிகாரம் இல்லாமல் இமாமோ, அமீரோ இல்லை என்று நிரூபிப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் பல அலுவல்களுக்காக நபி தோழர்களில் பலரை அமீர்களாக நியமித்து அனுப்பியுள்ள தைப் பட்டியலிட்டு, இதிலிருந்து ஆட்சி அதிகாரம் உள்ளவர்களால் நியமிக்கப்படுகிறவர்கள் மட்டுமே அமீராக இருக்க முடியும் என்ற தவறான வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார்.
அதாவது, முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோமே கிளிகளில் பல ரகங்களை வரிசைப்படுத்திவிட்டு பச்சையாக இருப்பவை அனைத்தும் கிளிகளே, காகங்களில் பல ரகங்களை அடுக்கிவிட்டு கருப்பாய் இருப்பவை அனைத்தும் காகங்களே, பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இயற்றப்பட்ட பல சட்டங்களை வரிசைப்படுத்திவிட்டு சட்டங்கள் என்றால் அவை பாராளுமன்றத்திலோ, சட்டசபைகளிலோ நிறைவேற்றப்பட்டவை மட்டும்தான் என்று வடிகட்டின மூடன் உளறுவதுபோல் தவ்ஹீது மவ்லவி(?)யும் உளறியுள்ளார்.
அமீர் என்றால் ஆட்சி அதிகாரம் பெற்றவர்களையும் குறிக்கும், ஆட்சி அதிகாரம் அல்லாத வேறு அதிகாரங்கள் பெற்றவர்களையும் குறிக்கும் என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவி(?) நன்கு அறிந்திருந்தும், தன்னை நம்பியுள்ள அப்பாவிகளை ஏமாற்றி வஞ்சிக்க இப்படி நயவஞ்சகமாக எழுதியுள்ளார்.
அதிகாரம் இல்லாமல் இமாமோ, அமீரோ இல்லை என்று தலைப்பிட்டு அதன் கீழ் 4:59 வசனத்தையும் எடுதி, அதிகாரம் என்றால் ஆட்சி அதிகாரம் மட்டும்தான் என்று அறிவீனமாக வாதிட்டு, அதற்கு ஆதாரமாக, நபி(ஸல்) அவர்களுக்கு ஹிஜ்ரத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் பல்வேறு காரியங்களுக்காக் அமீர்களை நியமித்து அனுப்பியதை பெரும் ஆதாரமாகத் தந்துள்ளார் தவ்ஹீத் மவ்லவி(?). நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் 13 வருடங்கள் இருந்தார்களே, அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத காரணத்தால், முஸ்லிம்கள் நபி(ஸல்) தலைமையில் ஒன்றுபட்டு இருக்கவில்லை; இன்று இவர் முஸ்லிம்களிடையே, அதுவும் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற சபதமேற்று வந்த முஸ்லிம்களை பல பிளவுகளில் ஆக்கியுள்ளது போல், பல பிளவுகளில், பிரிவுகளில் அன்றைய முஸ்லிம்கள் இருந்தார்கள் என்று இந்த தவ்ஹீத் மவ்லவி(?) வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவு மறுமையை மறந்த நிலையில் அவரது செயல்பாடுகள் இருப்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்தே வருகிறார்கள்.
அமீர் என்றால் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களும், ஆட்சியாளர்களால் ஆட்சிப் பணிக்கு நியமிக்கப் பட்டவர்களும் மட்டுமே என்று பச்சையாக இருப்பவை அனைத்தும் கிளிகளே என்று, ஒரு மூடன் வாதிடுவதுபோல் வாதிட்டு, அதற்காக ஆதாரங்களை எடுத்து வைத்தவர். அந்த இதழின் 20-ம் பக்கத்தில் ஒரு ஹதீஸை எடுத்து எழுதி அதற்கும் விளக்கம் கொடுத்திருப்பதைப் பாருங்கள்.
நபி(ஸல்) அவர்கள் முஆதையும், அபூ மூஸாவையும் யமனுக்கு (அமீர்களாக) அனுப்பியபோது, நீங்கள் இருவரும் நளினமாக நடங்கள்; கடுமையாக நடக்காதீர்கள்; மக்களிடம் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்; வெறுப்பை உருவாக்கி விடாதீர்கள். ஒருவர் இன்னொருவருக்கு இணங்கி நடங்கள்; கருத்து வேறுபாடு கொளாதீர்கள் என்று அறிவுரை செய்தார்கள். ஆதாரம்: புகாரி.
இந்த ஹதீஸில் ஒரே பகுதிக்கு ஒரே சமயத்தில் இரண்டு அமீர்களை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நியமித்துள்ளார்கள் என்பதை அறியமுடிகின்றது. அல்முபீன் மார்ச், 99, பக். 20
ஹதீஸில் மோசடி!
இப்படி எழுதி ஒரு ஜமாஅத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு அமீர்கள் (தலைவர்கள்) இருக்க முடியும் என முட்டாள்தனமாக எழுதியுள்ளார் தவ்ஹீத் மவ்லவி(?). உண்மை நிலையைப் பார்ப்போம்.
தவ்ஹீத் மவ்லவி(?)க்கு உண்மையிலேயே அல்லாஹ்வின் அச்சமும், மறுமை பயமும் இருந்தால், அதே புகாரியில் அதே அறிவிப்பாளர் அபூ புர்தா அறிவிக்கும் தெளிவான ஹதீஸ் கண்ணில் படாமலா போயிருக்கும். அபூ புர்தா அறிவிக்கிறார்.
அபூ மூஸா, முஆத் பின் ஜபல் (ரழி-ம்) ஆகியோரை ரசூல்(ஸல்) யமனுக்கு அனுப்பினார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாநிலத்திற்கு அனுப்பினார்கள்.யமன் இரு மாநிலங்களைக் கொண்டதாகும்….புகாரீ. (ர.அ.) 4341, 4342)
எந்த அளவு கல்நெஞ்சமும், வக்கிர புத்தியும் இருந்தால் இப்படி ஹதீஸில் மோசடி செய்யும் துணிச்சல் ஏற்படும். அதேபோல் இன்னொரு மோசடியையும் கவனியுங்கள்.
இந்தச் செய்தியில் ஹஜ் பயணத்தில் இருக்கும் பிரயாணிகளுக்கு அமீராக (அமீருல் ஹஜ்) இருந்தார் என்றிருப்பதை ஹஜ் விவகாரத்துறைக்கு அமீராக இருந்தார் என்று இவரது கற்பனைச் சரக்கையும் சேர்த்து ரீல் விட்டிருக்கிறாரே?இவர் எந்த அளவு மோசடி பேர்வழியாக இருப்பார்? புகாரீ(ரஅ)4363ஹதீஸ் வருமாறு: அபூஹுரைரா(ரழி) கூறியதாவது
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்திய ஹஜ்ஜின் போது அபூபக்கர்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்கு) அமீராக ஆக்கி இருந்தார்கள். அப்போது நஹ்ருடைய நாளில் இந்த ஆண்டுக்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது. இறையில்லம் கஃபாவை நிர்வாணமாக எவரும் வலம் வரவும் கூடாது என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூ பக்கர்(ரழி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். புகாரீ(ர.அ) பாகம் 4, ஹதீஸ் 4363
இந்த இரண்டு ஹதீஸ்களிலும் “விவகாரத்துறை” என்பதற்கு அரபி பதமும் இல்லை; நபி(ஸல்) அவர்களது காலத்தில் அப்படி ஒரு தனித்துறையும் இருக்கவில்லை. மாறாக ஹஜ் பிரயாணக் குழுவுக்கு அமீராக நியமிக்கப்பட்டதை இப்படி ஹஜ் விவகாரத்துறை என தனது கற்பனையைப் புகுத்தி ஹதீஸை திரித்து, வளைத்து, மறைத்து ஆட்சி அதிகாரம் உள்ளவர்களே அமீர்கள் என்ற அறிவீனமான அவரது வாதத்தை நிலைநாட்ட இப்படி பெரும்பாடு பட்டுள்ளார் தவ்ஹீத் மவ்லவி(?)
உளறலுக்கும் அளவே இல்லையா?
தனது மூடக் கொள்கையை நிலைநாட்ட அல்முபீன் 99 மார்ச் பக்கம் 40-ல் பயணத்தில் அமீர் என்ற தலைப்பில் தவ்ஹீத் மவ்லவி(?)யின் கற்பனை வளத்தைப் பாருங்கள்.
ஆட்சியும் அதிகாரமும் பெற்றவர்தான் அமீர் என்று குறிப்பிடப்படுகிறார். அத்தகையோருக்குக் கட்டுப்படுவதைத்தான் அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற கருத்திலமைந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்பதை இதுவதைக் கண்டோம்.
ஆட்சி அதிகாரம் வழங்கப்படாதவர், அமீர் எனக் குறிப்பிடப்பட்டதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் காணமுடியவில்லை.
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து இதை நாம் தெளிவாக அறிந்து கொண்டோம்.
இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் எழுகின்றது.
மூன்று பேர் பயணம் புறப்பட்டால் ஒருவரை அமீராக்கிக் கொள்ளவேண்டும் என்க கூறப்படுகிறதே! இந்த அமீரிடம் ஆட்சியும் அதிகாரமும் கிடையாதே! என்பதுதான் அந்த சந்தேகம்.
எனவே இது குறித்து விரிவாக நாம் அறிந்து கொள்வோம். மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரழீ) அபூதாவூது
ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள். இதை அபூஸலமா நாபிவு இடம் கூறியபோது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாபிவு கூறினார். நூல் : அபூதாவூது.
பிரயாணத்தில் அமீராகத் தேர்வு செய்யப்பட்டவர் இஸ்லாமியக் குற்றவியல் ச்ட்டங்களை நிலைநாட்ட முடியாது. கட்டாயப்படுத்தி ஜகாத்தை வசூலிக்க முடியாது. இன்ன பிற கடமைகளையும் செய்ய இயலாது. அவ்வாறிருந்தும் அவர் அமீர் எனக் கூறப்பட்டுள்ளதே! அதனடிப்படையில் அதிகாரமில்லாதவர்களையும் அமீர் எனக் கூறலாம் அல்லவா? அவருக்குக் கட்டுப்படுவதை மார்க்கக் கடமை என வாதிடலாம் அல்லவா? என்று பல கேள்விகள் இங்கே எழுகின்றன.
“அமீர்” என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் அதிகாரம் உடையவர் என்பதாலும் இருவரை நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அதிகாரமுடையவரைத்தான் அமீர் என கூறுவதாலும் இந்த ஹதீஸ் அவற்றுடன் மோதுவது போல் தோற்றம் தருகிறது.
எனவே இது குறித்து விரிவாக நாம் ஆராய முற்பட்டபோது எல்லா ஐயங்களும் விலகும் அளவுக்கு விளக்கங்கள் கிடைத்தன. அதை விரிவாகவே உங்கள் மத்தியில் சமர்ப்பிக்கிறோம்.
அபூ தாவூதில் இடம்பெற்ற முதல் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வருமாறு:
அபூதாவூது — அலீபின் பஹ்ர் — ஹாதிம் பின் இஸ்மாயீல் — முஹம்மது பின் அஜ்லான் — நாபிவு — அபூ சலமா — அபூ ஹுரைரா(ரழி) — நபிகள் நாயகம்(ஸல்)
அபூதாவூதில் இடம் பெற்ற இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வருமாறு:
அபூதாவூது — அலீபின் பஹ்ர் — ஹாதிம் பின் இஸ்மாயீல் — முஹம்மது பின் அஜ்லான் — நாபிவு — அபூ சலமா — அபூ ஹுரைரா(ரழி) — நபிகள் நாயகம்(ஸல்)
ஆய்வுக்குள் நுழையு முன் இந்த அறிவிப்பாளர்களின் பெயர்ப்பட்டியலை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆய்வுக்கு இந்தத் தகவலை நினைவுப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
இவ்விரு ஹதீஸ்களும் அலீ பின் பஹ்ர் என்பவர் வாயிலாக இமாம் அபூதாவூதுக்குக் கிடைத்துள்ளன.
அபூதாவூதை விட வயதில் மூத்தவர்களான ஹதீஸ்களை அறிஞர்கள் இமாம் அபூசுர்ஆ. இமாம் அபூ ஹாதம் ஆகியோருக்கும் இந்த ஹதீஸ்கள் கிடைத்தன. இவ்விருவருக்கும் அலீ பின் பஹ்ர் என்பவர் வழியாக இந்த ஹதீஸ் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு முந்தைய அறிவிப்பாளராக இடம் பெறும் ஹதீஸ் பின் இஸ்மாயீல் வழியாக இந்த ஹதீஸ்கள் கிடைத்துள்ளன.
அதாவது இமாம் அபூதாவூது எவரிடம் இதைக் கேட்டரோ அந்த அலீ பின் பஹ்ர் என்பவரும் இந்த இரு இமாம்களும் சமகாலத்தவர்கள். இவ்விருவரும் இந்த ஹதீஸை அலீ பின பஹ்ர் யாரிடம் கேட்டரோ (ஹாதிம் பின் இஸ்மாயீல்) அவரிடம் கேட்டவர்கள். இந்த விபரத்தையும் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் தகவலைப் பாருங்கள்.
ஹாதிம் பின் இஸ்மாயீல் — முஹம்மது பின் அஜ்லான் — நாபிவு — அபுசலமா — அபூ ஹுரைரா என்ற அறிவிப்பாளர் வழியாக ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் பற்றி அபூகர்ஆவிடமும் என் தந்தையிடமும் (அபூ ஹாதமிடம்) கேட்டேன். அதற்கு அவ்விருவரும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்கள் தொடரில் இடம் பெற்றுள்ளது. ஒன்று அபூஹுரைரா – மற்றொன்று அபூ சயீத் என விடையளித்தார்கள். (ஆதாரம்: இப்னு அபீஹாதம்)
அபூதாவூது எந்த அறிவிப்பாளர் வழியாக இந்த ஹதீஸை அறிவித்துள்ளாரோ அதே ஹதீஸ் பற்றித்தான் இவ்விரு இமாம்களிடமும் கேட்கப்படுகிறது. அமீராக ஆக்கிக் கொள்ளட்டும் (ஃபல்யுஅம்மிரு) என்ற இடத்தில் (ஃபல்யவும்முஹும்) இமாமத் செய்யட்டும் என்று இடம் பெற்றுள்ளது.
அதாவது இமாம் அபூதாவூதை விட மூத்தவர்களான ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் மேதைகளாகத் திகழ்ந்த இவ்விரு இமாம்களும் மூவர் பயணம் மேற்கொண்டால் அவர்கள் ஜமாஅத்தாக தொழ வேண்டும். ஒருவர் இமாமத் செய்யவேண்டும் என்ற கருத்தில் நபி(ஸல்) கூறியதுதான் அபூதாவூத் நூலில் அமீராக்கிக் கொள்ளட்டும் என்று இடம் பெற்றுள்ளது என்பதை இந்தத் தகவலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அபூ சயிதுல் குத்ரீ(ரழி) வழியாக அறிவிக்கப்படும் மற்றொரு ஹதீஸ் பைஹகியில் இடம் பெற்றுள்ளது. பயணத்தில் மூவர் சென்றால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இதே ஹதீஸ் முஸ்னத் அபீயஃலாவிலும் இடம் பெற்றுள்ளது. அமீராக்குங்கள் என்பதற்குப் பதிலாக இமாமத் செய்யட்டும் என்றும்தான் அங்கேயும் கூறப்படுகிறது.
முஸ்னத் தயாலிசியிலும் இந்த ஹதீஸ் இடம் பெறுகிறது. அங்கேயும் மேற்கண்டவாறு இடம் பெற்றுள்ளது.
நஸயீ இமாமின் சுனனுல் குப்ராவிலும் மேற்கண்டவாறு தான் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது.
பிரயாணத்தில் செல்லும்போது ஒருவர் மற்றவர் மீது ஆட்சி செலுத்தவதில்லை என்பதாலும், அங்கே அமீருக்கு வேலை இல்லாததாலும் ஏனைய நூல்களில் கூறப்படுவதே சரியான அறிவிப்பாக இருக்க முடியும்.
மேலும் முஹம்மத் பின் அஜ்லான் என்ற அறிவிப்பாளர் நாபிவு என்பவர் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் வார்த்தைக் குழப்பம் உள்ளது என்று உகைலீ என்ற ஹதீஸ்களை அறிஞர் கூறுகிறார். அபூதாவூதில் இடம்பெறும் ஹதீஸை முஹம்மத்பின் அஜ்லான். நாபிவு வழியாகவே அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே முஹம்மத் பின் அஜ்லான் வழியாக மற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூவர் பயணம் சென்றால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றே கூறப்பட்டுள்ளது.
மேலும் அபூசயீத்(ரழி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றுதான் அந்த ஹதீஸிலும் கூறப்படுகிறது.
தப்ரானி(அவ்ஸத்) நூலில் இப்னு உமர் அறிவிக்கும் ஹதீஸிலும் மூவர் பயணம் செய்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றே கூறப்படுகிறது.
ஆகவே பிரயாணத்தில் செல்பவர்கள் தனித்துத் தொழுது விடாமல் மூவரில் ஒருவரை இமாமாக ஏற்படுத்தித் தொழவேண்டும் என்பதுதான் சரியான அறிப்பாகும். பயணத்தில் அமீர் ஏற்படுத்துங்கள் என்பது சரியான அறிவிப்பாகாது. இப்னு அஜ்லான் — நாபிவு என்ற வழியாக அமைந்திருப்பதே இவ்வாறு முடிவு செய்யப் போதுமான காரணமாகும்.
ஆக இஸ்லாத்தில் அமீர் என்ற வார்த்தை ஆட்சி அதிகாரம் இல்லாக எவருக்கும் பயன்படுத்தப் பட்டதில்லை. எனவே அமீருக்குக் கட்டுப்படுங்கள் என்பது ஆட்சி அதிகாரமில்லாதவர்களுக்குப் பொருந்தாது என்பது சந்தேகமற நிரூபணமாகின்றது. (அல்முபீன் மார்ச் 99 பக்கங்கள் 40-43)
முதலில் இந்த அறிவீனமான வெற்று உளறலை அந்நஜாத்தில் இடம்பெறச் செய்ததற்கு வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். கடந்த எட்டு வருடங்களாக அமீர் பற்றிய அல்முபீனின் ஆய்வை நாம் அலசாமல் இருந்தது. அது தனது குற்றத்தை மறைக்க தவ்ஹீத் மவ்லவி(?) பித்தம் கலங்கி உளறி இருக்கிறார் என்பதே.
பீடிகையே அசத்தும்!
அதே சமயம் தவ்ஹீத் மவ்லவி(?)யின் நரித்தந்திரத்தையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தனது நச்சுக் கருத்தைத் திணிக்கு முன்னர், அவர் போடும் பீடிகை அவரைப் பற்றிய ஓர் உயர் எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆதரவாளர்களின் மனம் இப்படி அவருக்கு சாதகமாக திரும்பி இருக்கும் நிலையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், தனது நச்சுக் கருத்தைத் திணித்து விடுவார். அடுத்து இன்னொரு தந்திரம், வாதத்திற்கு சம்பந்தமில்லாதவற்றை வளவளா, கொளகொளா என எழுதி தனது ஆதரவாளர்களுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விடுவார். இந்த இரண்டு தந்திரஙகளுக் இங்கு பளிச்சென்று சுய சிந்தனையாளர்களுக்கு விளங்கும்.
இப்படி ஒரு அர்த்தமற்ற ஆய்வை செய்த அவர், ஒன்றில் ஆக அடி முட்டாளாக இருக்கவேண்டும்; அல்லது நன்கு அறிந்த நிலையில், தனது குற்றத்தை மறைத்து தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் தவறான எண்ணத்தில்தான் இப்படி உளறி இருக்க வேண்டும். இதில் எது சரி? என்பதை அவரது ஆதரவாளர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் ஆரம்பமே உளறலாகத்தான் இருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் பெற்றவர்தான் அமீர் என்று குறிப்பிடப்படுகிறார். அத்தகையோருக்குக் கட்டுப்படு வதைத்தான் அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற கருத்திலமைந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்பதை இதுவரை கண்டோம் என உளறி இருக்கிறார். பச்சை எல்லாம் கிளிகள், கருப்பெல்லாம் காகங்கள், சட்டங்கள் எல்லாம் பாராளுமன்றம், சட்டசபைகளில் இயற்றப்படும் சட்டங்களே என்று ஒரு மூடன் உளருவது போல் அதிகாரம் என்றாலே ஆட்சி அதிகாரம் மட்டும் தான் என்று உளறி இருக்கிறார்.
அதிகாரம் பலவகை!
மற்றபடி அதிகாரம் என்றால் ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல. சாதாரண ஒரு நிறுவனத்தை நடத்துவதற்காக ஒருவருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, அந்த நிறுவனம் அவரிடம் ஒப்படைக்கப் பட்டால், அந்த நிறுவனத்தின் “அமீர்” என்று அவரைச் சொல்லலாம். ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியரை அவரிடம் பாடசாலையை நிர்வகிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரை அப்பாடசாலையின் “அமீர்” என்று சொல்ல முடியும்.
மலிக்-மன்னர் என்று நேரடியாக ஆட்சி அதிகாரம் பெற்றரை சொல்வது போல், ஒவ்வொரு வகை அதிகாரங்களைப் பெற்றவர்களை குடும்பத் தலைவர், தலைமை ஆசிரியர், தலைமை அதிகாரி, தலைமை அமைச்சர் என அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப அழைக்கப்படுவர். அதிகாரம் என்பது பொதுச்சொல்; அதில் ஆட்சி இணைந்து ஆட்சி அதிகாரம் என்று சொல்வதற்கும் வெறுமனே அதிகாரம் என்று சொல்லுவதற்குமுள்ள வேறுபாடு தெரியாதவரல்ல தவ்ஹீத் மவ்லவி(?).
இப்போது இவர் கற்பனை செய்து அமைத்துள்ள “ததஜ”வுக்கு இவர் தலைவராக இருக்கிறார். அவருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே “ததஜ”வின் அமீர் என்று இவரைச் சொல்லுவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் “யார் அமீரை விட்டு ஒரு சான் அளவு வெளியேறினாலும் அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுவார்” என்ற இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்து புகாரியில் இடம்பெற்றுள்ள நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை “ததஜ” அமீராகிய தவ்ஹீத் மவ்லவி(?)யை விட்டு விலகுகிறவர்களுக்குப் பொருந்துமா? என்றால் நிச்சயம் பொருந்தாது. அது ஏன்? என்ற விபரத்தை இறுதியில் விளக்குவோம்.
அடுத்து ஆட்சி அதிகாரம் உள்ளவர் மட்டுமே “அமீர்” என்ற உளறலை நிலைநாட்டும் தீய எண்ணத்துடன், பிதற்றுவதைப் பாரீர்!
உளறல் ஏன்?
“மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்” என்ற நபி(ஸல்) கட்டளை தவ்ஹீத் மவ்லவி(?)யின் உளறலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால், அந்த முட்டுக் கட்டையை உடைத்தெறிய முகல்லிது, தரீக்கா மவ்லவி புரோகிதர்களைவிட கேடுகெட்ட நிலைக்குச் சென்று “எவர் என்னைப் பற்றி வேண்டுமென்றே பொய் கூறுகிறாரோ, அவர் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக்கொள்ளட்டும்” என்ற நபி(ஸல்) அவர்களின் மிகமிக ஆதாரபூர்வமான (முதவாத்திர்) ஹதீஸுக்கு இவர் எப்படி ஆளாகி இருக்கிறார் என்று பார்ப்போம். அல்முபீன் மார்ச் 99 பக்கம் 7-ல் எழுதியுள்ளதைப் பாருங்கள்.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டி கட்டுக்கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக் கொள்கிறது.
இப்படி எழுதி அமீரின் மகத்தான் பொறுப்பை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
முறையாக சிந்திப்போம்!
இப்போது சிந்தியுங்கள். மூன்று முஸ்லிம்கள் ஒரு பிரயாணத்தில் புறப்படுகிறார்கள். அவர்கள் பிரயாணம் போய் மீண்டும் ஊர் வந்து சேரும் வரை அவர்களுக்குள் ஒற்றுமை காக்கப்படவேண்டும். இப்படி சிறிய ஜமாஅத்தில் ஒற்றுமை பேணும் ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டால்தான். அது முழு முஸ்லிம் ஜமாஅத்துக்கும் வழிவகுக்கும்.
பிரயாணம் புறப்பட்ட அந்த மூவரும் தங்கள் தங்கள் வீட்டைவிட்டு புறப்பட்டு ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒன்றுகூடி விட்டார்கள். இப்போதுதான் ஷைத்தான் அவர்களது ஒற்றுமையைக் குலைக்க முற்படுவான். இப்போது அவர்கள் திருச்சியிலிருந்து சென்னை செல்லவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் தொடர் வண்டியில் போகலாம் என்கிறார். இரண்டாமவர் பேருந்தில் செல்லலாம் என்கிறார்; மூன்றாமவர் தனியாக மகிழ்வுந்து பிடித்து சவுகரியமாக போய்வரலாம் என்கிறார்.
இந்த மூன்று கருத்துக்களும் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரணான கருத்துக்கள் அல்ல; இவர்களிடையே ஒற்றுமையை எப்படி ஏற்படுத்துவது? ஒற்றுமை ஏற்படாவிட்டால், பிரயாண ஆரம்பத்திலேயே அவர்களிடையேயுள்ள ஒற்றுமை குலைந்துவிடும். அதனால்தான் அந்த மூவரிடையே ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) உங்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்கள். அதாவது அந்தக் குறிப்பிட்ட பிரயாணம் போய் திரும்பி வரும் வரை, அந்த பிரயாணத்தில் அந்த மூவருக்கிடையே ஏற்படும் கருத்து மோதல்களை தீர்த்து வைக்கும் அதிகாரம். அந்த அமீரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தைப் பெற்று அவர் அமீராகிறார். இந்த சாதாரண விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத மரமண்டையா தவ்ஹீத் மவ்லவி(?).
இந்த சாதாரண விஷயத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாத மரமண்டை என நடித்துக் கொண்டு என்ன நாடகமாடுகிறார் என்று பாருங்கள்.
நடிப்பது ஏன்?
நபி(ஸல்) அவர்கள் மூவரில் ஒரு அமீராக்கிக் கொள்ள கட்டளையிடவில்லை. பிரயாணத்தில் யாருக்கும் ஆட்சி அதிகாரம் இல்லையாம்! அதற்கு மாறாக அந்த மூவரும் தனித்து தொழுது விடாமல் அதில் ஒருவர் இமாமத் செய்ய வேண்டுமாம். அப்படித்தான் நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்களாம். எந்த அளவு நெஞ்சழுத்தத்துடன் இறையச்சம் இல்லாதிருந்தால் இப்படிப்பட்ட அப்பட்டமான ஒரு பொய்யை நபி(ஸல்) அவர்கள் பெயராலேயே சொல்ல முடியும்.
இந்த ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யை நிலைநாட்ட 40-43. நான்கு பக்கங்களில் எத்தனைப் பொய்களை அல்லாஹ்வின் அச்சமில்லாமல் அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
அவரது கற்பனையைப் பாருங்கள். அபூதாவூதில் இரண்டு இடங்களில் தவறுதலாக அமீராக்கிக் கொள்ளட்டும் என்று இடம் பெற்றுவிட்டதாம். ஆனால் பல நூல்களில் “அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும்” என்றே இருக்கிறதாம். என்னே அபத்தமான பிதற்றல் அரபி பண்டிதரின்(?) மொழிபெயர்ப்பைப் பாருங்கள். ஃபல்யுஅம்மிரு – அமீராக ஆக்கிக் கொள்ளட்டும். ஃபல் யவும்முஹும் – இமாமத் செய்யட்டும்.
இங்கு முதல் வரியில் அமீராக ஆக்கிக் கொள்ளட்டும் என்று மொழி பெயர்த்தவருக்கு இரண்டாவது வரியில் இமாமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று மொழி பெயர்க்க என்ன கேடு ஏற்பட்டது?
உண்மை இதுதான். இமாமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று மொழிபெயர்த்தால் அங்கேயே அவரது மடமை வாதம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால்தான் தன்னை நம்பியுள்ள அப்பாவி சிந்தனையில்லா இளைஞர், இளைஞிகளை ஏமாற்றி வஞ்சிக்கும் கெட்ட நோக்கத்துடன் இமாமத் செய்யட்டும் என்று மொழி பெயர்த்து, சிந்தனையாளர்களிடையே அடிமுட்டாள் என்ற பட்டத்தை வாங்கி யுள்ளார்.
ஹதீஸ்களில் புகுந்து விளையாடியுள்ளார். அவருக்குத் தேவைப்பட்டால் பலவீனமான ஹதீஸைப் பலமானது என்பார். பின்னர் அதேபோல் பலமான ஹதீஸை பலவீனமானது என வாதிடுவார்; தேவைப் பட்டால் அதே ஹதீஸை பலமானது என்பார். ஹதீசுக்குத் தவறான விளக்கம் கொடுத்து தடுமாற வைப்பார். தனது சூன்யப் பேச்சில் கட்டுண்டு கிடக்கும் அப்பாவி இளைஞர், இளைஞிகள் அவர் இரவை பகல் என்றாலும், பகலை இரவென்றாலும், கருப்பை வெள்ளை என்றாலும், வெள்ளையை கருப் பென்றாலும் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்று அசட்டுத் துணிச்சலில் இப்படி எல்லாம் மார்க்கத்தில் சடுகுடு விளையாடுவது அவரது வாடிக்கை. எனவே அதில் நாம் புக வேண்டியதில்லை.
ஆனால் அவரது இந்த மடமை நிறைந்த உளறலைசாதாரணமானப் பாமரனும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் புரியவைக்க முடியும்.
பிரயாணத்தில் சலுகைகள்!
பிரயாணத்தில் இருப்பவர்கள் நான்கு ரகா அத்துக்களை இரணடாகச் சுருக்கவும்(கஸ்ரு) முஹரையும், அஸரையும் இணைத்தும், மஃறிபையும், இஷாவையும் இணைத்தும் 4-ம், 5-ம் தொழ முடியும். அவர்கள்மீது ஜமாஅத் கடமை இல்லை. ஏன் வாரத்தில் ஒரு நாள் வெள்ளி அன்று தொழும் ஜும்ஆவே கடமை இல்லை என்பது விடாமல் முறையாகத் தொழுபவர்கள் அனைவரும் அறிந்த அப்பட்டமான உண்மை.
ஆக பிரயாணத்தில் கடமை இல்லாத ஜமாஅத் தொழுகையை, மூவர் பயணம் மேற்கொண்டால் அவர்கள் ஜமாஅத்தாக தொழவேண்டும்; தனித்துத் தொழுது விடாமல் மூவரில் ஒருவரை இமாமாக ஏற்படுத்தித் தொழவேண்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள் என்று கொஞ்சமும் பதறாமல் துணிந்து பொய் கூறும் ஒருவர் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருப்பார் என்பதை அவரது ஆதரவாளர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
பிரயாணத்தில் மூவரில் ஒருவரை அமீராக ஆக்கிக் கொள்ளட்டும் என்பதில் ஒற்றுமைக்குரிய முக்கிய குறிக்கோள் நிலைநாட்டப்படுகிறது. காரணம் மூவரும் மூன்றுவித கருத்தைக் கொள்ள இடம் இருக்கிறது. அங்கு மூவரும் ஒரே கருத்தில் ஒன்றுபட ஒரு அமீர் அவசியம் தேவைப்படுகிறார். எனவே இது நபி(ஸல்) அர்த்தம் நிறைந்த கட்டளை; சரியானது.
தவ்ஹீத் மவ்லவி(?) சொல்வது போல் மூவர் பயணம் செய்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை என்றால் இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பிரயாணத்தில் ஜும்ஆ தொழுகையே கடமை இல்லை என்பது நபி(ஸல்), அவர்களின் தெளிவான கட்டளையாக இருக்க, அதற்கு முரணாக நபி(ஸல்), பிரயாணத்தில் ஜமாஅத்தாக தொழுவது அவசியம் எனக் கட்டளையிட்டிருப் பார்களா? சரி! அப்படியே ஜமாஅத்தாக தொழுவதாக இருந்தாலும் அது மூவரோ, முன்னூரோ, மூவாயிரமோ அவர்களில் ஒருவர்தானே இமாமத் செய்ய முடியும். பிரயாணத்தில் மூவரும் மூன்றுவித கருத்தைச் சொல்லி அதிகாரம் செய்வதுபோல், இங்கு தொழுகையில் மூவரும் இமாமத் செய்ய முடியுமா ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று கட்டளை இட? அப்படியானால் இப்படிபட்ட அர்த்தமற்ற மூடத்தனமான கட்டளையை நபி(ஸல்) பிறப்பித்திருக்க முடியுமா?
நபி(ஸல்) பேராலேயே பொய்!
இந்த தவ்ஹீத் மவ்லவி(?) எப்படிப்பட்ட அப்பட்டமான, பாராதூரமான ஒரு பொய்யை நபி(ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டியிருக்கிறார். நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கைப்படி இவரது முடிவு என்னவோ?
தவ்ஹீத் மவ்லவி(?) எடுத்தெழுதியுள்ள முதல் இரண்டு ஹதீஸ்களிலும் மூவரில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்றும், மற்ற ஹதீஸ்களில் மூவரில் ஒருவரை இமாமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று தெளிவாக ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல்தான் இருக்கின்றன.
“அமீர்”, “இமாம்” இந்த இரண்டு பதங்களும் இங்கு ஒரே கருத்தையே தருகின்றன. அந்த மூவர் கொண்ட ஜமாஅத்திற்கு பொறுப்பேற்று வழி நடத்துவதையே குறிக்கிறது, மற்ற இருவரும் குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; அதன் மூலம் ஒற்றுமை குலையாமல் காக்கப்பட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் தெளிவான கட்டளையாக இருக்கிறது.
தவ்ஹீத் மவ்லவி(?) ஆட்சி அதிகாரம் உள்ளவர் மட்டுமே அமீராக இருக்க முடியும் என்ற அடிமுட்டாள்த்தனமான கருத்தை பிடிவாதமாக வைத்துக் கொண்டு, அதையே நிலைநாட்ட மூடத்தனமான வாதத்தை வைப்பதால், மலையைக் கில்லி எலியைப் பிடிப்பதுபோல், பெரும் பிரயத்தனப்பட்டு நான்கு பக்கங்களை வீணடித்து, பிரயாணத்திலும் அந்த மூவரும் தனித்துத் தொழக் கூடாது, ஜமாஅத்தாகவே தொழ வேண்டும். அதில் ஒருவர் மட்டுமே இமாமத் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களே கட்டளையிட்டுள்ளதாக, சிறிதும் அல்லாஹ்வின் அச்சமின்றி உளறியிருக்கிறார். அவரது ஃபத்வாவில் ஒருவர் மட்டுமில்லாமல் இருவர், மூவரும் இமாமத் செய்யலாம் போலும். அதனால் தான் ஒருவர் மட்டுமே இமாமத் செய்ய நபி(ஸல்) அவர்களே வலியுறுத்தியுள்ளதாக கதை அளந்துள்ளார். துணிந்து பொய்யுரைத்துள்ளார்.
குற்றத்தை மறைக்க!
கேவலம் தான் செய்த ஒரு குற்றத்தை மறைக்க, குர்ஆனிலும், ஹதீஸிலும் தன் மனம்போன போக்கில் ஷைத்தானுக்கு அடிமைப்பட்டு விளையாடி வருகிறார் தவ்ஹீத் மவ்லவி(?). வேண்டாம் வேட்பு மனு, ஸைய்யித் போன்ற தலைப்புகளில் எடுத்துக் கொண்ட ஆட்சி அதிகாரம் பெற்றவரே “அமீர்” என்ற அர்த்தமற்ற பிதற்றலுக்கு சம்பந்தமில்லாக விஷயங்களை எல்லாம் எழுதி தனது ஆதரவாளர்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறார். குற்ற உணர்வுடன் செயல்படும்போது இப்படி எல்லாம் எழுத வேண்டி வரும்; உளற வேண்டி வரும்.
அதே இதழ் பக்கம் 46-ல் ஓர் அரிய உபதேசம் சொல்லும் இரண்டு ஹதீஸ்களை எடுத்து வைத்துள்ளார். அந்த உபதேசப்படி முதலில் அவர் நடக்க முன் வந்தால் அது பெரிதும் அவரது ஆதரவாளர்களுக்குப் பலன் தரும்.
மறுமை நாளும் மாபெரும் ஏமாற்றுக்காரதும்!
மறுமை நாளில் ஒவ்வொரு ஏமாற்றுக்காரனுக்கும் ஒரு கொடி உண்டு. அவன் ஏமாற்றிய அளவுக்கு அது அவனுக்கு உயர்த்திக் காட்டப்படும். அறிந்து கொள்ளுங்கள்! பொது மக்களின் தலைவரைவிட மிகப் பெரிய ஏமாற்றுக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ, முஸ்லிம்.
அமீர் என்றால் அதிகாரம் உடையவர் என்பதைக் கண்டோம். அதே சமயம் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக யாரையும் ஏமாற்றலாம். எப்படியும் நடக்கலாம், எவரையும் மோசடி செய்யலாம் என்ற எண்ணத்தில் தலை கால் புரியாமல் ஆட்டம் போட்டு விடக்கூடாது. அப்படிச் செய்தால் மறுமையில் கிடைக்கும் தண்டனையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அமீருக்குக் கட்டுப்படுதலின் அளவுகோல்!
நாங்கள் ஐந்து மற்றும் நான்கு பேர்களாக இருக்கும்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) எங்களிடம் வந்தார்கள். இந்த இரு எண்ணிக்கையில் ஒரு கூட்டம் அரபியர்களாவர். மற்றவர்கள் அந்நியர்களாவர். அப்போது நபி(ஸல்) அவர்கள் செவிசாயுங்கள், எனக்குப் பின்னால் அமீர்கள் தோன்றுவார்கள். யார் அவர்களிடம் சென்று அவர்கள் சொல்லும் பொய்யை உண்மையாக்கி, அவர்கள் செய்யும் அநியாயத்திற்குத் துணைபோகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அவர் தடாகத்தே வரமாட்டார். யார் அந்த அமீரிடம் செல்லாது அவர்களது அநியாயத்திற்குத் துணை போகாது அவர்கள் சொல்லும் பொய்யை உண்மைப்படுத்தாது இருக்கின்றார்களோ அவர் என்னைச் சார்ந்தவர். நான் அவரைச் சார்ந்தவன். அவர் தடாகத்தை வந்தடைவார் என்ற செய்தியை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கூறினார்கள். அறிவிப்பவர் : காஃப்பின் அஜ்ரா, திர்மிதி.
அமீருக்குக் கட்டுப்படுகிறேன் என்று சொல்லி, கண்மூடித்தனமாகப் பின்பற்றும் செயலை மார்க்கம் கண்டிக்கிறது. அமீர் செய்யும் அநியாயங்களுக்குத் துணை போகக் கூடியவர் நரகம் செல்வார் எனவும் எச்சரிக்கை செய்கின்றது. அல்மூபீன் மார்ச். 99 பக். 46, 47
உணர்வு பெறுவாரா?
முதலில் தவ்ஹீத் மவ்லவி(?) இந்த அரிய உபதேசங்களை தனக்கும் தன்னை நம்பிக் கண்மூடிச் செயல்படும் தனது ஆதரவு இளைஞர், இளைஞிகளுக்கு உபதேசம் செய்தால் மிகவும் நன்மை பயக்கும். முதலில் அன்னிசா 4:112 இறை எச்சரிக்கையைப் படித்து அவர் உணர்வு பெற்றால் அது மிகவும் நல்லது.
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதிமீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறான். (4:112)
1987க்குப் பிறகு தவ்ஹீத் மவ்லவி(?)யின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர்கள், முன்னர் அவருக்கு மிக உற்ற நண்பர்களாக இருந்துவிட்டு, பின்னர் அவராலேயே பாதிப்புக்கு உள்ளானவர்கள் நன்கு அறிந்த உண்மை. பல குற்றச் செயல்களுக்கு அவரே முழுமுதல் காரணமாக இருந்துவிட்டு, பின்னர் அதை மற்றவர்கள்மீது சுமத்திய பல சம்பவங்களை அவர்களே அறிவார்கள். அவர்களே நேரில் அவற்றில் சம்பந்தப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் தங்களின் தவறுக்கு மன்னிப்புக் கெட்டிருக்கிறார்கள்.
1988களில் அந்நஜாத்தில், இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை; முஸ்லிம்கள் அனைவதும் அல்லாஹ்வி னதும், அவனது தூதரினதும் கட்டளைப்படி, நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற ஒரே இஸ்லாமிய பேரியக்கத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி எழுதினோம். அதற்கு மறுப்பாக பல மூடத்தனமான வாதங்களை தவ்ஹீத் மவ்லவி(?) எடுத்து வைத்தார். அதில் ஒன்று வருமாறு:
அன்று சொன்னது! இன்று சொல்வது!
நாம் ஒரு கூட்டமைப்பாக அமீரை ஏற்படுத்தி குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் இயங்கி வருக ிறோம். இது முஸ்லிம்களின் கூட்டமைப்பு அல்ல எனக் கூறப்போகின்றீர்களா? (அல்ஜன்னத்-ஏப்ரல் 93)
அதாவது கமாலுத்தீன் மதனியை அமீராகக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட ஜாக் பற்றி இவ்வாறு சான்றளித்துள்ளார். அன்று 93-ல் வரிந்து கட்டிக்கொண்டு ஜாக்கை இப்படி தூக்கி நிறுத்தியவர், 99-ல் அதே கமாலுத்தீன் மதனி மற்றும் ஜாக் பற்றி என்ன கூறுகிறார் பார்த்தீர்களா? அதேபோல் 2002-ல் தமுமுக தலைவர்களைப் பற்றி ஆகா, ஓகோ என்று உணர்வில் எழுதியவர், 2005-ல் அவர்களைப் பற்றி என்னென்ன அவதூறுகளைப் பரப்புகின்றார் பார்த்தீர்களா?
இல்லாததை இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்புவதில் தவ்ஹீத் மவ்லவி(?)யை மிஞ்ச இன்று உலகில் யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். இதை யாரும் மறுப்பார்களானால், எம்மிடம் வரட்டும். அவர் எழுதிய கடிதங்கள், பேசிய ஆடியோ கேஸட்டுகள் மூலம் எமது கூற்றை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.
அவர் கூறுவது தவறாக, பாவமாக இருந்தாலும் அதை அப்படியே ஒப்புக் கொள்கிறவர்களை ஆகா, ஓகோ என புகழ்வார். அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டி கண்டிக்க ஆரம்பித்தால் வந்தது வினை. அவர்களை எந்த அளவு இழிவுபடுத்த வேண்டுமோ, கேவலப்படுத்த வேண்டுமா அவை அனைத்தையும் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு, அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி துணிந்து செயல்படுத்துவார். அல்லாஹ்மீது ஆணையிட்டே அவதூறுகளைப் பரப்புவார். காசுக்காக அவரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பலர் இந்த உண்மையை அறிவார்கள்.
இந்த நல்ல மனிதர்தான்(?) மேற்படி இதழின் 46, 47 பக்கங்களில் அரிய உபதேசங்களை ஊருக்கு உபதேசமாக எடுத்து எழுதியுள்ளார். தன்னை மறந்து ஊருக்கு உபதேசம் செய்வது புரோகிதர்களின் வாடிக்கைதானே!
தவ்ஹீத் மவ்லவி(?) ஆய்வுப்படி முஸ்லிம்கள் ஒன்றுபடவே முடியாது!
இன்று நமது இந்திய நாட்டில் முஸ்லிம்களில் யாருக்குமே ஆட்சி அதிகாரம் இல்லை என்பதை தவ்ஹீத் மவ்லவி(?) மறுக்கமாட்டார். எனவே இந்தியாவில் முஸ்லிம்கள் ஒருவரை தலைவராக – அமீராக ஏற்று அவரின் கீழ் ஒன்றுபட்டு ஓரணியில் செயல்பட வேண்டிய கட்டாயமில்லை. ஆளாளுக்கு அவரவர்கள் மனோ விருப்பப்படி இயக்கங்களையும், அமைப்புகளையும் புற்றீசல்போல் வளர்த்துக் கொண்டு, பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு சீரழிந்த வாழ்க்கை வாழலாம் என்பதுதான் தவ்ஹீத் மவ்லவியின் இந்த 56 பக்க ஆய்வின் நோக்கம். இந்தியாவில் மட்டுமல்ல. எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு ஆட்சி அதிகாரம் இல்லையோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய கட்டாயமில்லையே; அல்லாஹ் அப்படி ஏவவில்லை. ஆட்சி அதிகாரம் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே அவரது தலைமையில் ஒன்றுபட்டிருக்க வேண்டும். பிரியக்கூடாது. அப்போதுதான் அது பெரிய குற்றம்; தலை சீவப்படும் குற்றம் என்பது தான் தவ்ஹீத் மவ்லவி(?)யின் ஆய்வின் முடிவு ஆட்சி அதிகாரமில்லாத முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் அமீர் இல்லாக கட்டுப்பாடற்ற மிருகங்கள் போல் வாழலாம் என்பதுதான் அவர் சொல்லாமல் சொல்லும் தீர்ப்பு.
எண்ணற்ற நபிமார்கள் ஆட்சி அதிகாரமில்லாமல்தான் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் ஆரம்ப 13 வருட கால மக்கா பிரசார பணி ஆட்சி அதிகாரம் இல்லா நிலையில்தான் நடந்துவந்தது. நபி(ஸல்) மக்காவிலும், ஆட்சி அதிகாரமில்லா நபிமார்களும் தங்களை நபியாக ஏற்றுக் கொண்ட மக்களிடம் அதிகாரம் செலுத்த முடியாமல்தான் பிரசாரபணி செய்கு வந்ததாக இந்த தவ்ஹீத் மவ்லவி(?) கூறுகிறாரா? அவர்கள் அந்த நபிமார்களின் சமூகங்களை பிளவுபடுத்தாமல் ஒன்றுபட்டிருக்கவில்லை என்று இவர் சொல்கிறாரா? என்னே அறிவீனமானதொரு ஆய்வை செய்து தன்னை நம்பியுள்ள அப்பாவி இளைஞர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டிக் கட்டுக்கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் உள்ளது என்ன? ஏராளமான அமீர்கள் உருவாகும்போது சமுதாயம் ஏராளமான பிரிவுகளாக மாறுகின்றன. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் கண்ணுறக் கூடிய ஒரு உண்மை முஸ்லிம் குழம்பிப் போகிறான்.
ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய ஒரு சித்தாந்தம் ஒருபோதும் வேற்றுமையை ஏற்படுத்தாது என்ற உணர்வேர்டு அமீருக்குக் கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும் தெளிவு பிறக்கும். இன்ஷா அல்லாஹ். அல்முபீன் மார்ச் 99. பக்.7
இந்தப் பீடிகையோடு ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீத் மவ்லவி(?)யின் ஆய்வு, இறுதியில் முஸ்லிம் களிடையே எஞ்சி இருக்கும் ஒற்றுமையையும் குலைக்கும் விதமாக ஆட்சி அதிகாரமுள்ளவர் மட்டுமே அமீர்; அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஜமாஅத்தை பிளவுபடுத்தாமல், வேறு போட்டி ஜமாஅத் அமைக்காமல் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரமில்லாதவர்கள் அமீர்கள் அல்ல. அவர்கள் வெறுந் தலைவர்கள் மட்டுமே; அப்படிப்பட்டவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்ல வில்லை. அந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறலாம். புதிது புதிதாக ஜமாஅத்துகள் அமைக்கலாம். அது மார்க்கத்தில் குற்றமில்லை. முஸ்லிம் சமுதாயத்தை எத்தனைப் பிளவுகளாக, பிரிவுகளாக ஆக்கினாலும் அது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று தவ்ஹீத் மவ்லவி(?) கூறிக்கொண்டு, கடந்த 20 வருடங்களில் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று நான்கு மத்ஹபு பிளவுகளிலிருந்து வெளியேறியவர்களை ஏழு இயக்கப் பிரிவுகளில் ஆக்கி அவர்களைப் பலவீனப்படுத்தியுள்ளார். இதுவே எதார்த்தமான உண்மை; தவ்ஹீத் மவ்லவி(?)யின் சாதனை.
மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதே புரோகிதர் பணி!
இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தில், சுமால் பத்து லட்சம் கட்டுக்கதைகளையும், கப்ஸாக்களையும் ஹதீஸ்கள் என்று புகுத்திவிட்டு, மார்க்கத்தைக் கலப்படமாக்கி சிக்கல்கள் நிறைந்ததாக ஆக்கி, அந்த சிக்கல்களை அவிழ்த்துவிட்டு, மார்க்கத்தை எளிதாக்கித் தரும் பேர்வழிகள் என திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளும் புரோகித இனத்தைச் சேர்ந்தவர்தானே இந்த தவ்ஹீத் மவ்லவி(?)யும். அந்த புரோகிதப் புத்தி இவரை விட்டுப் போகுமா? சுத்தமான கலப்படமே இல்லாத புரோகிதன் நான் என்பதை நிலைநாட்டி இருக்கிறார்.
தவ்ஹீத் மவ்லவி(?) செய்துள்ள ஹிமாலயத் தவறை இப்போது புரிய வைக்கிறோம். கவனமாகப் படியுங்கள்.
தவ்ஹீத் மவ்லவி(?)யின் ஹிமாலயத் தவறு!
அல்குர்ஆனில் அமீரைப் பற்றிய 4:59 இறைவாக்கு, நபி(ஸல்) அவர்களின் அமீரைப் பற்றி அனைத்து ஹதீஸ்கள், ஜமாஅத் பற்றிய ஹதீஸ்கள் இவை அனைத்தும், அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒரே முஸ்லிம் ஜமாஅத்தாகிய “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” பற்றி மட்டுமே! நபி(ஸல்) அவர்களது 40வது வயதிலிருந்து 63 வயது வரை அந்த ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத் (21:92, 23:52) தவிர வேறு எந்த ஜமாஅத்தும் இருக்கவில்லை என்பதை இந்தப் புரோகித வர்க்கத்திலுள்ள எந்த மவ்லவியும் மறுக்க முடியாது.
ஒரே மகனைப் பெற்றுள்ள தந்தை ஒருவர், தனது மகனுக்குப் பெயரிட்டிருந்தாலும், பெரும்பாலும் எப்படி எனது மகன் என்று மட்டுமே கூறுவாரோ, ஒரு மாப்பிள்ளைக்கு மட்டுமே திருமணம் நடக்கும் வீட்டில், எப்படி மாப்பிள்ளையின் பெயரைக் குறிப்பிடாமல் பெரும்பாலும் மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று மட்டுமே கூறப்படுமோ, அதே போல் ஒரே ஜமாஅத், “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்று மட்டுமே இருந்ததால் பெரும்பாலும் ஜமாஅத், ஜமாஅத் என்று மட்டுமே ஹதீஸ்களில் காணப்படுகிறது.
நபி(ஸல்) அவர்களது நபித்துவ காலத்தில் இல்லாது. அவர்களது மறைவுக்குப் பின்னர் இந்தப் புரோகிதர்கள் தோற்றுவித்த எந்த ஜமாஅத்தினதும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்.என்றோ, அவர் ஜமாஅத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றோ நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்தப்படும் அனைத்துப் பிளவுகளை விட்டும் விலகி விடுங்கள் (தில்க்கல் ஃபிர்க்கா), அந்தப் பிரிவினர் உங்களைத் துன்பப்படுத்தி உங்களது உணவு தேவைகளைத் தடுத்தாலும், நீங்கள் மரவேர்களை சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் “அந்தப் பிரிவு ஜமாஅத்துகளில் ஒருபோதும் இருந்துவிடாதீர்கள்” என’ற நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை தான் முன் அறிவிப்பாகக் காணப்படுகிறது.
இஸ்லாம் – முஸ்லிம் அல்லாத பிரிவுகள் வழிகேடே!
படைத்த எஜமானன் அல்லாஹ்வின் 3:103, 105, 6:153,159, 30:32, 42:13, 14 மிகக் கடுமையான எச்சரிக்கைகள் படியும், நபி(ஸல்) அவர்களின் இந்த மிகக் கடுமையான எச்சரிக்கைப்படியும், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்ட ஷீஆ, சுன்னத்வல் ஜமாஅத், 4 மத்ஹபு பிரிவுகள், தரீக்கா பிரிவுகள், ஸலஃபி, இஹ்வானுல் முஸ்லிமீன், அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, ஜிஹாத், கிலாஃபத், அஹ்ல குர்ஆன், பாகிஸ்தானிலும் இலங்கையிலும் இருக்கும் “ஜமாஅதி அல் முஸ்லிமீன்” (இவர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி தங்களை “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்று சொல்லிக் கொண்டாலும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு முரணாக, 21:92, 23:52 அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக முஸ்லிம் உம்மத்தைப் பிளவு படுத்துகிறார்கள்) ஆக இவைபோல் அனைத்து பிளவுகளும், பிரிவுகளும் தில்க்கல்ஃபிர்க்கர்-அனைத்துப் பிரிவுகளையும் விட்டு நீங்கிவிடு என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நிராகரிக்கப்பட வேண்டிய வழிகேட்டுப் பிரிவுகளே.
அல்மாயிதா 5:3லுள்ள “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள்மீரு என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று அல்லாஹ் மிகத் தெளிவாக அறிவித்துவிட்டான். இதற்கு மேலும் மார்க்கத்தில் எதையும் நுழைக்க முடியும் என்பவன் வடிகட்டின மூடனாகவும், வழிகெடுபவனாகவும், வழிகெடுப்பவனாகவும் மட்டுமே இருக்க முடியும். 33:36 இறைவாக்கும் இதையே உறுதிப்படுத்துகிறது.
இந்த புரோகித மவ்லவிகள் தங்களின் சூன்ய, வசீகர பேச்சைக் கொண்டு முஸ்லிம்களை மயக்கி வழிகெடுப்பவர்கள் என்பதை மிகத் துள்ளியமாக அறிந்துள்ள, எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் ஆல இம்ரான் 3:19-ல் கூறுவதைப் பாருங்கள்.
நிச்சயமாக இஸ்லாம்(மட்டும்) தான் அல்லாஹ்விடத்தில் மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படும்(3:19) என்று வலியுறுத்திச் சொல்கிறான் அல்லாஹ்.
அப்படியும் இந்தப் புரோகிதர்கள் முஸ்லிம்களை பல வழிகேட்டுப் பிரிவுகளில் ஆக்கி விடுவார்கள் என்பதையும் அறிந்துள்ள அல்லாஹ், அந்தப் பிரிவுகள் ஏற்றுக் கொள்ளப்படாது; அவர்கள் நஷ்டவாளிகளே என்று 3:85-ல் எச்சரிக்கிறான்.
இன்னும், இஸ்லாம் அல்லாத (வேறு பிரிவுப் பெயர்களிலுள்ள) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அப்பிரிவுகள்) ஒருபோதும் அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் (அப்பிரிவுகளிலுள்ள) அவர்கள் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்கள்.
அல்லாஹ் நமக்குக் கொடுத்தது இஸ்லாம் மார்க்கம். அந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் முஸ்லிம்கள். அதை உறுதிப்படுத்தி அல்லாஹ்வே நமக்கு முஸ்லிம்கள் என்று பெயரும் சூட்டிவிட்டான். (22:78) நம்மீது கடமையான பிரசார பணியைச் செய்வதால் நமக்கு பிரத்தியேகமாக தனிப்பெயர் சூட்டக் கூடாது. முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே சொல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.(41:33)
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசும் புரோகிதர்கள்!
இரவும் பகலைப் போன்ற இவ்வளவு தெள்ளத் தெளிவான இறைவனது கட்டளைகள் இருந்தும், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகித வர்க்கம், எப்படியும் தங்களின் சூன்ய, வசீகர பேச்சால் மயக்கி, அல்லாஹ் அத்தவ்பா 9:8-ல் சொல்லிக் காட்டுவது போல், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி, இஸ்லாம், முஸ்லிம் என்று வாயால் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு இவ்வுலகில் ஆதாயத்தைப் பெற்றுத்தரும், அவர்களே கற்பனை செய்யும் வழிகேட்டுப் பிரிவுப் பெயர்களில் முஸ்லிம்களை இழுத்துச் சென்று விடுகிறார்கள்.
எனவே அப்படிப்பட்ட பிரிவு ஜமாஅத்களில் அசந்து, மறந்து சென்றிருந்தாலும், உடனடியாக அந்த பிரிவுகள் அனைத்தை விட்டும் நீங்கி விடுங்கள் என்று நபி(ஸல்) மிகக் கடுமையாகக் கட்டளையிட்டுள்ளார்கள்.
இப்புரோகித மவ்லவிகள் தங்களின் சூன்ய, வசீகர பேச்சால் மயக்குவார்கள். அது பலன் தராவிட்டால் மிரட்டுவார்கள். தங்களின் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு பெரும் துன்பம் தருவார்கள். நியாயமான உங்களின் தேவைகள், உணவுத் தேவைகள் முதல் கொண்டு, உங்களுக்குக் கிடைக்காமல் தடுப்பார்கள். அவற்றிற்காக அவர்கள் அழைக்கும் வழிகேட்டு பிரிவுகளில் சென்று விடாதீர்கள். மரவேர்களைச் சாப்பிட்டு காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே! என்று நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருந்தால், இஸ்லாம், முஸ்லிம் அல்லாத பிளவு, பிரிவுப் பெயர்கள், குறிப்பாக ஜாக், ததஜ போன்ற முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் இயக்கங்கள் எந்த அளவு வழிகேட்டு இயக்கங்கள் என்பதை இனவெறிக்கு ஆளாகாதவர்கள் நிச்சயமாக உணர முடியும்.
கேவலம் 10 ஆயிரம், 15 ஆயிரம் சம்பளம்-கூலி கிடைக்கிறதே, அதைவிட்டு வெளியேறினால், நமது பிழைப்புக்கு வேறு வழி என்ன? என்ற சிந்தனையில் தவ்ஹீத் மவ்லவி(?)யின் பித்தலாட்டங்களுக்கும், தில்லுமுல்லுகளுக்கும் துணை போகிறவர்கள், நாளை மறுமையில் தங்களின் நிலை என்னவாகும் என்று மேற்படி நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையை முன்னிருத்திச் சிந்திக்கவும்.
ஜமாஅத்தைப் பிளவு படுத்திய தனது குற்றத்தை மறைக்க, தவ்ஹீத் மவ்லவி(?), ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீர்களாக இருக்க முடியும் என்று நிலைநாட்ட அவர் செய்த, இந்த அறிவீனமான ஆய்வை விட, அல்லாஹ்வின் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு, மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளை விட்டும் விலகி விடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். அதனால் நான் ஜாக்கை விட்டும் வெளியேறுகிறேன் என்று கூறி இருந்தால், அது மிக அழகான, அல்லாஹ்வை திருப்திப் படுத்தக் கூடிய முடிவாக இருந்திருக்கும். ஆனால் ஜாக் பிரிவைக் கைக்கழுவி விட்டு, புதியதொரு பிரிவை கற்பனை செய்ய திட்டம் வகுத்ததால், அவ்வாறு அறிவிக்க அவரால் முடியாமல் போய்விட்டது.
களியக்காவிளையில் திணரல் ஏன்?
இதே போல்தான் களியக்காவிளை விவாதத்திலும் சமாதி வழிபாடு, மெளலூது, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் போன்ற குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரண்பட்ட ஷிர்க்கான செயல்களை மறுத்துக் கூற 7:3, 18:102-106, 33:36, 66, 67, 68 போன்ற அல்குர்ஆன் நேரடிக் கட்டளைகளை, எடுத்து வைக்காமல், மெளலூது பாக்களிலுள்ள குறைகளை எடுத்து வைப்பதன் மூலம் மூக்கறுபட்டார். காரணம் இந்த குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தால். அவரது புதிய கற்பனையான ததஜவுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டு விடும்; அதனால் தான் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொடுக்காமல், தனது சொந்த கற்பனைகளை எடுத்து வைத்து மண்ணைக் கவ்வினார்.ஸ