Tuesday, March 29, 2011

அநியாயத்துக்கு அளவில்லையா? பீ.ஜே


TNTJ விட்டு நீக்கியபோது பாக்கர்அண்ணன் pj விற்கு எழுதிய கடிதம்  
 உங்களுடைய விசயத்தில் உங்களின் நன்மையை மட்டும் நினைத்தே செயல்பட்டனே! அதற்கு நீங்கள் எனக்கு தரும் பரிசு ஒழுக்கக்கேடன் பட்டமா?
உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றியே சிந்தித்தேனே! அதற்கு பரிசு பொருக்கி பட்டமா?
உங்களை உத்தமர் என்று ஊரெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தேனே! அதற்கு நான் அயோக்கியத்தனம் செய்ததாக ஊரெல்லாம் நீங்கள் தரும் பட்டமா?
உங்கள் குடும்ப மேன்மையே என் இலட்சியம் என்று இருந்தேனே! அதற்கு தான் நான் குடும்பஸ்த்தன் இல்லை என்று தாங்ள் தரும் பட்டமா?
நீங்கள் மக்கள் ஆதரவற்று இடிவழுந்தவனைப் போல் இருந்தபோது உங்களுக்கு உற்ற துணையாக இருந்த எனக்கு நீங்கள் தருவது இடி ராஜா பட்டமா?
உங்கள் கை அசைவுக்கும், கண் அசைவுக்கும் களம் கண்ட என்னை களங்கமானவன் என்பது நீங்கள் எனக்கு தரும் பட்டமா?
உங்களின் பொன்னான முகம் வாடக்கூடாது என்றிருக்கும் எனக்கு பெண் மோகம் கொண்டவன் என்று நீங்கள் தரும் பட்டமா?
உங்களின் சிந்தனைகள் சிற்றூhருக்கும் சென்றிட வேண்டும் என்று எண்ணிய எனக்கு சிலுமிஷகாரன் என்று நீங்கள் தரும் பட்டமா?
குழப்பவாதி என்று சமுதாயம் உங்களை தூற்றிய போது, சமுதாயத்தின் அண்ணன் என்று உங்களை வலம் வரச் செய்த எனக்கு குறும்புத்திக்காரன் என்று தாங்கள் தரும் பட்டமா?
உலவி என்று ஊர் அறியா பட்டம் பெற்றிருந்த உங்களை பேரறிஞர் என்று புகழ் சூட்டி மகிழ்ந்த எனக்கு, செல்லாக் காசாகிவிடுவாய் என்று தாங்கள் தரும் எச்சரிக்கை பட்டமா?
உங்களின் அநியாயச் செயலுக்கு உங்கள் மீதுள்ள பாசத்தால் நான் நிறையவே துணை போய்ட்டேன், உங்களால் நானும் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டேன். அநியாயத்துக்கு அளவில்லையா? அண்ணனே, உங்களால் அநீதிக்கு ஆளனது நானே கடைசியாக இருக்க வேண்டும். நீங்கள் சுவனம் செல்ல வேண்டும்.
                                                                           இவண்

                                                              எஸ்.எம்.பாக்கர்
                                              முன்னாள் பொதுச் செயலாளர்
                                                                     இ.த.ஜ

                                                                  
                                                                                                               நன்றி 
                                                                                                         tmpolitics

1 comment:

  1. நீங்கள் உங்கள் முழு முகவரியை எழுதுங்கள் பிறகு மற்றவரை விமர்சியுங்கள்.

    ReplyDelete